கொடைக்கானல் கிராமங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. இயக்கி வைத்தார்
1 hour before
<p><strong>கொடைக்கானல் கிராமங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. இயக்கி வைத்தார்</strong></p><p>திண்டுக்கல், ஜூன் 23- திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கொடைக்கானல் வட்டார கிராமங்க ளில் அமைக்கப்பட்ட உயர்கோபுர மின் விளக்குகளை திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். கொடைக்கானல் ஊரகப் பகுதி களில் இரவு நேர பாதுகாப்பையும், பொதுமக்களின் வசதியையும் மேம் படுத்தும் நோக்கில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. காமனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மங்களம்கொம்பு கிராமத்தில் ரூ.7 லட் சம் மதிப்பீட்டிலும், வில்பட்டி ஊரா ட்சிக்கு உட்பட்ட பேத்துப்பாறை பகுதி யில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டிலும் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப் பட்டன. இந்த இரண்டு திட்டங்களை யும் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தா.அஜாய் கோஷ், காப்பி விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் எம்.செல் லையா, கொடைக்கானல் தாலுகா குழு உறுப்பினர்கள் விஷ்ணுவர்த் தன், பாண்டியராஜன், ராஜேஷ்க ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், பிரபாராஜமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
