தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொடைக்கானல் இளைஞர் ராமன் படுகொலை அனைத்துக் கொலையாளிகளையும் கைது செய்ய தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தல்

9 Aug 2026, 8:59 pm
கொடைக்கானல் இளைஞர் ராமன் படுகொலை அனைத்துக் கொலையாளிகளையும் கைது செய்ய தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தல்

கொடைக்கானல் இளைஞர் ராமன் படுகொலை அனைத்துக் கொலையாளிகளையும் கைது செய்ய தலித் விடுதலை இயக்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல், ஆக. 9 -கொடைக்கானல் பூம்பாறை அருகே அருந்ததிய இளைஞர் ராமன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில்தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனத் தலித் விடுதலை இயக்கம்வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக இயக்கத்தின் மாநிலத் தலைவர் கருப்பையா தலைமையில் திண்டுக்கல் மாவட்டவருவாய்அலுவலர் ஜெயபாரதியிடம் நேரில் மனு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கில் ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள தாகவும், முதல்தகவல் அறிக்கையின்படி குற்றவாளிகளின் பெற்றோர்கள் மற்றும் கூட்டாளிகள் அனைவரையும்காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உடற்கூறாய்வுக்குப் பிறகுஉடனடியாக வழங்கப்பட வேண்டிய ரூ.6 லட்சம் இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றார்.மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கான மளிகைப் பொருட்கள், 2 ஏக்கர் உழவடை நிலம், குடும்பஓய்வூதியம் மற்றும் இலவச வீட்டுமனையுடன் கூடிய கான்கிரிட் வீடு ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்எனவும், 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரினார்.

பாதிக்கப்பட்ட ராமனின் மனைவி புவனேஸ்வரிக்கு விடுதி சமையலர் பணி வழங்கப்பட்டுள்ளதைச்சுட்டிக்காட்டிய அவர், தலித் பெண்களுக்குச் சமையலர் போன்ற கீழ்நிலைப் பணிகளை வழங்குவது நவீனதீண்டாமையாகும் என்றார். 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள அப்பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாகமுழுமையாக மேம்பட ஏதுவாக, அவருக்கு இளநிலை உதவியாளர் (Junior Assistant) பணியிடத்தை அரசு வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.