கொடைக்கானல் காமனூரில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கண்டெடுப்பு
17 May 2026, 9:01 pm

கொடைக்கானல் காமனூரில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கண்டெடுப்பு

திண்டுக்கல், மே 17- திண்டுக்கல மாவட்டம் கொடைக் கானல் காமனூரில் இந்திய தொல்லி யல் துறையின் சார்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்ற அகழாய்வில் பெருங்கற்காலத்தைச் சேர்நத பொருட் கள் முற்கால மனிதனின் சவக்குழிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தமிழக வரலாற்றறில் இன்னொரு ஆதிச்ச நல்லூராக விளங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. அது பற்றிய விவரம் வருமாறு: கொடைக்கானல் வட்டம் தாண்டிக் குடி அருகேயுள்ளது காமனூர்.

இந்த கிராமத்தில் இந்திய தொல்லியல் துறை கடந்த ஜனவரி மாதம் முதல் அகழாய்வில் ஈடுபட்டு வருகிறது. டால் மென்களின் தொகுப்பாக அடையாளம் காணப்பட்ட ஒரு சவக்குழி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அந்த சவக்குழிகளில் ஈமச்சடங்கு பொருட்கள் கிடைத்தன.

இதுவரை 7 அறைகள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இரண்டு இணையான வரிசையில் அமைந்துள்ள அந்த டால்மென்கள் பகுதியில் கிடைத்த சவக் குழிகளில் ஒவ்வொரு வரிசையிலும் 3 அறைகள் உள்ளன. அதே நேரத்தில் சிறிய அறை மேற்கு பகுதியில், ஒட்டு மொத்த சுற்றுச் சுவருடன் உள்ளன.

அந்த சுவர்களின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக தரைப்பல கைகளும், செங்குத்து கற்களையும் வைப்பதற்கு முன்பு, கட்டியவர்கள் அறைகளின் அடிப்பகுதியில் சிறிய கற்கள், மண், மற்றும் பானை ஓடுகள் ஆகியவற்றின் கலவையை நிரப்புப் பொருளாக பயன்படுத்தியுள்ளனர்.

புதைகுழி முழு புதைகுழி வளாகமும் கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஒரு செவ்வக வடிவ, கல்லால் கட்டப்பட்ட சுவரால் சூழப்பட்டுள்ளது.

இந்தச் சுவர், உலர் கட்டுமான நுட்பங்களைப் பயன்படுத்தி ஓரளவு சீரான அடுக்குகளில் கட்டப் பட்டுள்ளது, பெரும்பாலும் கற்குவி யல் நிரப்புப் பொருட்களால் மூடப் பட்டுள்ளது. இது ஈமச்சடங்கு வடிவமை ப்பின் ஒரு முக்கிய பகுதியாக இருந்த தைக் காட்டுகிறது.

மீட்கப்பட்ட கலைப்பொருட்களில் இரும்புக் கத்தி, உளி, அம்பு முனை மற்றும் வாள் ஆகியவற்றுடன், கார்னிலி யன் (செதுக்கப்பட்ட மற்றும் செதுக்கப் படாத), அகேட், ஜாஸ்பர், சால்செ டோனி, லாபிஸ் லாசுலி, மற்றும் குவார்ட்ஸ் ஆகியவற்றால் செய்யப் பட்ட மணிகள், பதக்கங்களும் அடங்கும்.

மிக முக்கியமாக, இந்தோ-பசிபிக் கண்ணாடி மணிகளுடன், சிவப்பு மட்பாண்டங்கள், சிவப்பு வழு வழுப்பான மட்பாண்டங்கள், கருப்பு மட்பாண்டங்கள், கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் போன்ற மட்பாண்டங்களும் ஏராளமாகக் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே பண்ணைக்காடு தாண்டிக்குடி பகுதிகளில் கிடைக்கப் பட்ட கல் பதுக்கைகள் மற்றும் டால்மென்களில் ஆய்வு செய்ததில் இரும்பு காலத்திற்கு முந்தைய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளன. இந்த பொருட்கள் பெருங்கற் காலத்தைச் சேர்ந்தவையாக சொல்லப்பட்டன.

தற்போது மீண்டும் அதே பகுதியில் உள்ள காமனூரில் நடைபெற்ற அகழாய்வில் அதே பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பொருட் கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது கொடைக்கானல் பகுதியில் ஆதி பழங்குடிகள் வசித்ததற்கான அடையாளங்களாக திகழ்கின்றன. -இலமு,திண்டுக்கல்