வண்ண மலர்கள் ; படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் களைகட்டிய கொடைக்கானல்
18 May 2026, 10:55 pm
<p><strong>வண்ண மலர்கள் ; படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் களைகட்டிய கொடைக்கானல்</strong></p><p>மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம். அதன்படி தற்போது கோடை விடுமுறை காரணமாக குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63ஆவது மலர் கண்காட்சி களைகட்டியுள்ளது. சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், பேன்சி, பேட்டுனியா, கேலண்டுலா, பிளாக்ஸ், செல்லோசியா, டேலியா என பல்வேறு ரோஜா வகைகள் மலர் கண்காட்சியில் உள்ளன. வண்ண மலர்களை உற்சாகத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் செல்பி, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.</p>
