இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என புகார் கொடைரோடு சுங்கச்சாவடி அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகை
19 Jun 2026, 10:26 pm
<p><strong>இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என புகார் கொடைரோடு சுங்கச்சாவடி அலுவலகத்தை பணியாளர்கள் முற்றுகை</strong></p><p>சின்னாளப்பட்டி,ஜூன் 19- திண்டுக்கல் மாவட்டம்,திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலையில் கொடைரோடு அருகே சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் ரேசி (Racy project) என்ற தனியார் நிறுவனத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரண்டு சிப்ட்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.இவர்களுக்கு கடந்த மாதமும் இந்த மாதமும் சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் 50-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நிறுவன மேலாளர் ராமநாதன் நடத்திய பேச்சுவார்த்தையில் இன்று அனைவருக்கும் முழு சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.</p>
