தங்கத் திருட்டு வழக்கின் எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு தேவஸ்வம் போர்டில் சிறப்பு நியமனமா? யுடிஎப் அரசுக்கு கே.கே.ஷைலஜா கேள்வி
13 Jun 2026, 9:07 pm

தங்கத் திருட்டு வழக்கின் எதிர்தரப்பு வழக்கறிஞருக்கு தேவஸ்வம் போர்டில் சிறப்பு நியமனமா? யுடிஎப் அரசுக்கு கே.கே.ஷைலஜா கேள்வி

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தின் வழக்கறிஞரை, தேவஸ்வம்போர்டின் துறையின் சிறப்பு வழக்கறிஞராக யுடிஎப் (ஐக்கிய ஜனநாயக முன்னணி) அரசு நியமித்துள் ளது குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.கே.ஷைலஜா வலி யுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கோட்டயத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசுகையில்,“சபரிமலை தங்கத் திருட்டு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ‘ஸ்மார்ட் கிரியே ஷன்ஸ்’ நிறுவனத்திற்காக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞரையே, தற்போது போர்டின் சிறப்பு வழக்கறிஞராக அரசு நியமித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வலதுசாரிகளின் பொய்ப் பிரச்சாரங்க ளால் இதுவரை தவறாக வழிநடத்தப் பட்ட பொது மக்கள், தற்போது உண்மை நிலையைப் புரிந்து கொள்வார்கள். தங்கத் திருட்டில் ஈடுபட்டவர்களோடு யாருக்குத் தொடர்பு இருக்கிறது.

அவர்களுக்குப் பின்னணியில் இருந்து உதவுவது யார் என்பது இந்த நியமனத்தின் மூலம் மக்க ளுக்குத் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு உடனடியா கப் பதிலளிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.