கே.கே.நகர் அரசு மருத்துவமனையை இஎஸ்ஐ-க்கு வழங்குவதை மறு பரிசீலனை செய்க! சுகாதாரத்துறை அமைச்சருக்கு வேல்முருகன் கடிதம்
23 Sept 2026, 1:12 am

கே.கே.நகர் அரசு மருத்துவமனையை இஎஸ்ஐ-க்கு வழங்குவதை மறு பரிசீலனை செய்க! சுகாதாரத்துறை அமைச்சருக்கு வேல்முருகன் கடிதம்

சென்னை, செப்.22–கே.கே.நகர் அரசு மருத்துவமனையை இஎஸ்ஐ பயன்பாட்டிற்கு வழங்கும் கடந்த திமுக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது,

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ்க்கு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை கே.கே.நகர் அரசு புறநகர் மருத்துவமனையையும், அதனைச் சுற்றியுள்ள இடத்தையும் அருகில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் பயன்பாட்டிற்கு வழங்க துறை முடிவு செய்துள்ளதாக அறிகிறோம்.

கே.கே.நகர் அரசு மருத்துவமனை கடந்த 1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தினசரி 2ஆயிரம் புறநோயாளிகளுக்கு மருத்துவ சேவை வழங்கி வருகிறது. 100 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவும் செயல்படுகிறது. மருத்துவமனை கட்டிடம் மற்றும் அதனைச் சுற்றி சுமார் 5 ஏக்கர் பரப்பளவு இடம் உள்ளது.

இந்த மருத்துவமனையை, 500 படுக்கைகள், நவீன மருத்துவ உப கரணங்கள் மற்றும் மேம்பட்ட மருத்துவக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட கொண்ட நவீன மருத்துவமனையாக மாற்ற நீண்டகாலமாக கோரி வருகிறோம்.விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மதுரவாயல் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 15 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் முறைசாரா தொழி லாளிகள். அவசர மருத்துவத் தேவைக்கு இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர்.இஎஸ்ஐ-யுடன் இந்த மருத்துவமனை இணைக்கப்பட்டால், இஎஸ்ஐ அடையாள அட்டை இல்லாதவர்கள் சிகிச்சை பெற முடியாது.எனவே, பொதுமக்களின் நலனைக் கருதி கே.கே.நகர் அரசு மருத்துவமனையை இஎஸ்ஐ மருத்துவமனை பயன்பாட்டிற்கு வழங்குவதை கைவிட வேண்டும். கே.கே.நகர் மருத்துவமனையை நவீன மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.