சிதிலமடையும் கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு: ஒன்றிய அரசின் அலட்சியத்தால் அவதிபடும் குடியிருப்பாளர்கள்!
6 Jul 2026, 11:39 pm

சிதிலமடையும் கே.கே.நகர் மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு: ஒன்றிய அரசின் அலட்சியத்தால் அவதிபடும் குடியிருப்பாளர்கள்!

சென்னை,ஜூலை 6- மத்திய பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கே.கே. நகர் குடியிருப்புகள், பரா மரிப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான தொய்வு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளால் தற் போது அவல நிலையை எட்டி யுள்ளன. இங்கு வசிக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அவர்க ளது குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

நிர்வாகத்தின் பாராமுகம்: குட்டிச் சுவராகும் குடியிருப்புகள்

கே.கே.நகர் சி.பி.டபிள்யூ.டி குடியிருப்புகளில் நிலவும் அவ லங்கள் குறித்து பலமுறை புகார் அளித்தும், நிர்வாகம் எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

குடியிருப்பின் அவல நிலை கட்டமைப்புச் சிதைவு

பழுதடைந்துள்ள வீடுகள், சேத மடைந்துள்ள ஜன்னல்கள் மற்றும் கதவுகள் முறையாகப் பராமரிக் கப்படாமல் உள்ளன. இதனால் குடியிருப்புகள் பலவீனமடைந்து, பாதுகாப்பற்ற சூழல் உருவாகி யுள்ளது.

சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை

குடிநீர் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலை யங்கள் சரிவர பராமரிக்கப்படா ததால், குடிநீர் விநியோகத்தில் சுகாதாரச் சிக்கல்கள் எழுந்துள் ளன. கிணறுகளைச் சுத்தம் செய்யாமலும், மழைநீர் வடி கால்கள் மற்றும் கழிவுநீர் கால் வாய்களை முறையாகத் தூர் வாராமலும் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

பொது வசதிகள்

சாலைகள் குண்டும் குழியு மாக உள்ளன. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாகச் செயல்படவில்லை. மேலும், சிறுவர் பூங்காக்கள் மற்றும் மின் விளக்குகள் பராமரிப்பின்றி பாழ டைந்து கிடக்கின்றன. மரம் வெட்டு தல் போன்ற வழக்கமான பணி களும் முடக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

பராமரிக்கப்படாத காலி வீடுகள் மற்றும் குடியிருப்பின் நுழைவாயில் கதவுகளின் அவல நிலை, சமூகவிரோதிகளின் கூடார மாக அந்த இடங்களை மாற்றி யுள்ளது. இது குடியிருப்பாளர் களின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கியுள்ளது.

நிர்வாகத்தின் மெத்தனம் தட்டிக்கேட்க ஆளில்லையா?

இவ்வளவு குறைகளும் இருந்தும், ஏன் இன்னும் சீரமை ப்புப் பணிகள் தொடங்கப்பட வில்லை? அனுபவம் வாய்ந்த ஊழி யர்களைப் பணியில் அமர்த்தா மல், தற்காலிக மற்றும் அனுபவ மற்றவர்களைக் கொண்டு இப் பணிகளைச் செய்வதே இந்த அவலத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு குடியிருப்பிற்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்ன? “நாங்கள் வசிக்கும் குடியி ருப்புகள் சிதைந்து வருகின்றன. பாதுகாப்பற்ற சூழலில் உயி ருக்குப் பயந்து வாழ்கிறோம். மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், நேரில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்,” எனப் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர் கள் குமுறுகின்றனர். பலமுறை குடியிருப்பு வாசி களும் ஒன்றிய அரசு ஊழியர்க ளும் புகார் அளித்தும் மத்திய பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில் பழுத டைந்த குடியிருப்புகள் உடைந்து விழுந்தால் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை

மத்திய பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்ச கம் உடனடியாகத் தலையிட்டு பழுதடைந்த வீடுகள், கதவுகள், ஜன்னல்களை போர்க்கால அடிப் படையில் சீரமைக்க வேண்டும், தூய்மைப் பணிகளைத் துரிதப் படுத்தி, கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்களைச் சீரமைக்க வேண்டும், சமூகவிரோதச் செயல் பாடுகளைத் தடுக்க பாதுகாப்பு நட வடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்.

அலட்சியம் தொடர்ந்தால், குடி யிருப்பு வாசிகளை ஒன்று திரட்டிப் பெரிய அளவிலான போராட்டங் களை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று ஊழியர் கள் எச்சரித்துள்ளனர். எனவே இனி யும் தாமதிக்காமல் உரிய நிதியை ஒதுக்கி மத்திய பொதுப்பணித் துறை இந்த குடியிருப்பில் போர்க் கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ள னர்.