தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலை நேரத்தைத் தாண்டி வாழ உரிமை உண்டு ஐடி ஊழியர்களின் பணிச்சுமைக்கு எதிராக ‘கிட்டு’ கர்ஜனை!

13 Jun 2026, 9:10 pm
வேலை நேரத்தைத் தாண்டி வாழ உரிமை உண்டு ஐடி ஊழியர்களின் பணிச்சுமைக்கு எதிராக ‘கிட்டு’ கர்ஜனை!

வேலை நேரத்தைத் தாண்டி வாழ உரிமை உண்டு ஐடி ஊழியர்களின் பணிச்சுமைக்கு எதிராக ‘கிட்டு’ கர்ஜனை!

தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறையில் அண்மைக்காலமாக நள்ளிரவு வரை வேலை வாங்கும் கலாச்சாரம் மிகத் தீவிரமாக அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. எந்நேரமும் வேலை செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தால் ஐடி ஊழியர்களின் ஆரோக்கியம், குடும்ப வாழ்க்கை, மன நிம்மதி முற்றிலும் சீரழிந்து வருகிறது.

இந்நிலையில், வேலை நேரத்தைத் தாண்டி நிம்மதியாக வாழ ஐடி ஊழியர்களுக்கும் முழு உரிமை உண்டு என்று கர்நாடக தகவல் தொழில் நுட்ப ஊழியர் சங்கம் (கிட்டு) பிரகடனப்படுத்தி யுள்ளது.

பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் உள்ள பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களின் ஊழி யர்கள் பங்கேற்ற ‘கிட்டு’ (KITU) ஒயிட்பீல்டு கிளையின் பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாப வெறிக்காக ஊழியர்களைக் கூடுதல் நேரம் வேலை செய்ய வைப்பதையே ஒரு இயல்பான நடைமுறை யாக மாற்றி வருவதை எதிர்த்து, கூட்டாகப் போராட வேண்டியதன் அவசியம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள்:

1. அலுவலக வேலை நேரத்திற்குப் பிறகு அலு வல் சார்ந்த அழைப்புகள் மற்றும் மின் னஞ்சல்களைப் புறக்கணிக்கும் ‘தொடர்பைத் துண்டிக்கும் உரிமை’ (Right to Disconnect) என்பதைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும்.

2. ஊழியர்களின் உடல்நலம் மற்றும் குடும்ப நலனைப் பாதுகாக்கும் ஆரோக்கியமான பணி-வாழ்க்கை சமநிலையை நிறுவனங்கள் கட்டாயமாக உறுதிப்படுத்த வேண்டும்.

3.ஐடி ஊழியர்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்க ளைத் திரட்டி ஒரு வலுவான கூட்டுப் போராட்ட இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

அதே போல, மனிதநேயமற்ற கார்ப்பரேட் பணிச் சுரண்டலுக்கு எதிராக ஒயிட்பீல்டு பகுதி ஐடி ஊழியர்கள் அனைவரும் ஓரணி யில் திரண்டு தங்களின் உரிமைகளை வென் றெடுக்க உறுதியேற்றுள்ளனர்.

(தி லெப்ட் வியூஸ்)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.