ராணுவத்தின் உயரிய கீர்த்தி சக்ரா விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
12 Jun 2026, 10:04 pm
<p><strong>ராணுவத்தின் உயரிய கீர்த்தி சக்ரா விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு சொந்த ஊரில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு</strong></p><p>தேனி,ஜூன் 12- இந்திய ராணுவத்தின் உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்ற கம்பம் ராணுவ வீரருக்கு மாலை யணிவித்து பட்டாசு வெடித்து தாரை, தப்பட்டை முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (33). இவர் இந்திய ராணு வத்தில் லான்ஸ் நாயக் பதவி யில் காஷ்மீர் ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் 2024- ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தெற்கு காஷ்மீர் பகுதி யான குல்காம் பகுதியில் தீவி ரவாதிகள் ஒழிப்பு நடவ டிக்கையில் ஈடுபட்டிருந் தார். அப்போது ஐந்து தீவிர வாதிகளுக்கும் ராணுவத் திற்கும் இடையே கடுமை யான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் தீவிரவாதி கள் சுட்டதில் மீனாட்சி சுந்தரத்தின் வலது தோள் பட்டை மற்றும் வாய் பகுதி யில் குண்டு தாக்கியது. பலத்த காயமடைந்த நிலை யிலும் இவர் தீவிரவாதிகளு டன் தொடர்ந்து சண்டை யிட்டு 5 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்று தனது குழுவைக் காப்பாற்றினார். இவரின் வீர தீரச் செயலை பாராட்டி இந்திய அரசு இவ ருக்கு கீர்த்தி சக்ரா விரு தினை அறிவித்தது. 2026 ஆம் ஆண்டு இந்திய அரசு 7 வீரர்களுக்கு இந்த விருதை வழங்கியது. இதில் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரமும் ஒருவர். கடந்த 8-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளி கையில் நடைபெற்ற விழா வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, கீர்த்தி சக்ரா விருதினை மீனாட்சிசுந்த ரத்துக்கு வழங்கி கவுர வித்தார். இந்நிலையில் சொந்த ஊரான காமயகவுண்டன் பட்டிக்கு ஜூன் 12 வெள்ளி யன்று ராணுவ வீரர் மீனாட்சிசுந்தரம் வருகை தந்தார். தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் அவருக்கு சால்வை அணிவித்து உற்சாகமான வரவேற்பு அளித்தனர். கிராம மக்கள், உற வினர்கள், நண்பர்கள், முன்னாள் ராணுவத்தினர், முக்கிய பிரமுகர்கள், மாண வர்கள் என பலரும் பாராட்டினர். இக்கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் சிலர் கூறுகையில், அதி வீரச்செயல்களுக்காக இந்திய ராணுவத்தின் உயரிய விருதை எங்கள் கிரா மத்தைச் சேர்ந்த வீரர் பெற்றது எங்களுக்கு பெரு மையாக உள்ளது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்த னர்.</p>
