கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
8 Apr 2026, 5:30 am
<p><strong>கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு</strong></p><p>கோவை, ஏப்.7: ஆனைமலை பகுதியில் கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.</p><p>அப்போது அவர் பேசுகையில், இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். மேலும், இப்பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p>
