கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
7 Apr 2026, 5:42 pm
<p><strong>கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு</strong></p>
<p>கோவை, ஏப்.7- குறிச்சிப் பகுதியில் கிணத்துக் கடவு திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன் தீவிர வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டார். கோவை கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் கேவி கேஎஸ். சபரி கார்த்திகேயன் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார். இந்நிலை யில், திங்களன்று குறிச்சி தெற்கு 97 ஆவது வார்டுக்குட்பட்ட பகு தியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப் போது அந்த பகுதி மக்களின் தேவை களையும், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் பற்றியும் கேட்டறிந்து, நான் வெற்றி பெற்றவுடன் மக்களின் தேவைகள் அனைத் தும் நிறைவேற்றிதரப்படும் என்று வாக்குறு தியை அளித்தார். இதில், குறிச்சி தெற்கு பகுதி செயலாளர் இரா.கார்த்திகேயன், 97 ஆவது வார்டு செயலாளர் ஈச்சனாரி மகா லிங்கம் மற்றும் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
