முந்தய பக்கம்

கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

8 Apr 2026, 5:30 am
கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கோவை, ஏப்.7 ஆனைமலை பகுதியில் கிணத்துக்கடவு திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவை கிணத்துக்கடவு தொகுதி திமுக வேட்பாளர் வேட்பாளர் குறிச்சி பிரபாகரன் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.

ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 17 ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அந்த பகுதி மக்களின் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்து பணிவுடனும் கனிவுடனும் தான் வெற்றி பெற்றவுடன் மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

இதில் குறிச்சி தெற்கு பகுதி செயலாளர் இரா.சுரேந்திரன், 17 ஆவது வார்டு செயலாளர் சகாயராணி மகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram