கீழ்வேளூர் எம்எல்ஏ டி.லதாவின் அலுவலகம் திறப்பு விழா
2 Jun 2026, 9:26 pm
<p><strong>கீழ்வேளூர் எம்எல்ஏ டி.லதாவின் அலுவலகம் திறப்பு விழா </strong></p><p>நாகப்பட்டினம், ஜுன் 2 - தமிழக சட்டமன்றத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.லதாவின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா ஜுன் 2 (செவ்வாய்க்கிழமை) அன்று நடை பெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் கச்சனம் சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து தலைமையில் விழா நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன் அலுவலகத்தை திறந்து வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் நாகைமாலி, திராவிட முன்னேற்றக் கழக வடக்கு ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனியப்பன், கீழ்வேளூர் பேரூராட்சி செயலாளர் அட்சயலிங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முருகையன், வி.அம்பிகாபதி, கே. சித்தார்த்தன், ஏ.வடிவேல், ஒன்றியச் செயலாளர்கள் முத்தை யன், வெங்கட்ராமன், பாண்டியன், ராஜகுரு, ராஜா லெனின், நாகை நகரச் செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் டி.லதா நன்றி கூறினார். </p>
