நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம்
5 Jun 2026, 10:31 pm
<p>நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இந்த கல்வி ஆண்டின் பள்ளி திறப்பு விழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.லதா, மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் சீருடை வழங்கினார். இந்த நிகழ்வில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், கில்லுக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி புதிய வகுப்பு கட்டிட கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர். முத்தையன் கலந்து கொண்டார்.</p>
