தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் டி. லதா நன்றியறிவிப்பு சுற்றுப்பயணம்!

19 May 2026, 8:53 pm
கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் டி. லதா நன்றியறிவிப்பு சுற்றுப்பயணம்!

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் டி. லதா நன்றியறிவிப்பு சுற்றுப்பயணம்!

நாகப்பட்டினம், மே 19 - திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டி. லதா, வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (மே 19) காலை, நீலப்பாடி பேருந்து நிலையத்தி லுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, தமது நன்றி யறிவிப்பு சுற்றுப்பயணத்தை டி. லதா துவங்கினார்.

தொடர்ந்து, அத்திப்புலியூர், எரவாஞ்சேரி, குறுமணங்குடி, வெங்கி டங்கால், ஒக்கூர், கோகூர், வடகரை, ஆனைமங்கலம், அகரகடம்பனூர், பட்டமங்கலம், கூத்தூர், குருக்கத்தி, செருநல்லூர், இலுப்பூர், வடக்காலத்தூர், ராதாமங்கலம், இருக்கை, வண்டலூர், மோகனூர், 75 அனக்குடி, வெண்மணி, தேவூர், காக்கழனி, 64 மானலூர், ஆந்தகுடி, சிகார், கூரத்தூங்குடி, 105 மானலூர், கிள்ளுக்குடி, சாட்டியகுடி, கோயில் கண்ணப்பூர், ஆதமங்கலம், கொடி யாளத்தூர், வலிவலம், 119 அனக்குடி, வடக்குப்பனையூர், தெற்குப்பனை யூர், கீழ்வேளூர், பேரூர் பகுதி மக்களைச் சந்தித்தார்.

அப்போது, சட்டமன்ற உறுப்பினர் டி. லதாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சுற்றுப்பயணத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் என். கௌதமன் தலைமை வகித்தார்.

திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனி யப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.பி. நாகை மாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. சுப்பிர மணியன், பி. சுபாஷ் சந்திரபோஸ், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். அம்பிகாபதி, கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பாண்டியன், தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். முத்தையன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.