கீழ்வேளூர் தொகுதியில் டி.லதா எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
21 May 2026, 10:56 pm
<p><strong>கீழ்வேளூர் தொகுதியில் டி.லதா எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு</strong></p><p>நாகப்பட்டினம், மே 21- தமிழக சட்டமன்றத் தேர்தலில் கீழ்வேளூர் தொகுதியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்தில் வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும், டி.லதா எம்எல்ஏ நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடியில் துவங்கியது. திமுக கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மலர்வாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கீழையூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள திருக்குவளை, எட்டுக்குடி, வழக்கரை, மேல வழக்கரை பாலக்குறிச்சி, தண்ணீலபாடி, வேப்பஞ்சேரி, இளையான்குடி, கொளப்பாடு, பாங்கல், பனங்காடி, கச்சநகரம், சித்தாய்மூர், கொத்தங்குடி ஆகிய ஊர்களிலும், நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியத்தில் உள்ள அக்கரைப்பேட்டை, வடக்கு பொய்கைநல்லூர், தெற்குப் பொய்கைநல்லூர், கருவேலங்கடை, பாப்பாகோயில், வடவூர், குறிச்சி, அகலங்கண், செம்பியன்மாதேவி உள்ளிட்ட ஊர்களிலும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. </p>
