கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
6 Apr 2026, 4:15 pm
<p><strong>கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் </strong></p>
<p>குழித்துறை,ஏப்.6- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டி யிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். குமரி மேற்கு மாவட்ட திமுக செய லாளரும் அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் , தேமுதிக மாவட்ட செயலாளர் ஐடன் சோனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜய மோகன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக ஊர்வலமாகச் சென்ற போது அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள் டைட்டஸ், ஆஸ்கர் பிரடி, பால்ராஜ், பால்மணி, திமுக நிர்வாகிகள் மரிய சிசு குமார், ததேயு பிறேம் குமார், சிபிஎம் கிள்ளியூர் கிழக்கு வட்டாரச்செயலாளர் ராஜா, முஞ்சிறை வட்டாரச் செயலாளர் அலெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஷிபு மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.<br />
</p>
