கீழக்கரையை இருளில் தள்ளும் தொடர் மின்வெட்டு மின்வாரியத்தின் அலட்சியத்தால் மக்கள் கொந்தளிப்பு
3 Jun 2026, 9:49 pm

கீழக்கரையை இருளில் தள்ளும் தொடர் மின்வெட்டு மின்வாரியத்தின் அலட்சியத்தால் மக்கள் கொந்தளிப்பு

இராமநாதபுரம், ஜூன் 3- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை யில் தொடர்ந்து அதிகரித்து வரும் மின் வெட்டு பிரச்சனையால் பொதுமக்கள் கடும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக முதியோர், பெண் கள், சிறு குழந்தைகள், உடல்நலக் குறைபாடு களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிர மங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மின்வெட்டு ஏற்படும் ஒவ்வொரு முறை யும் “மரம் சாய்ந்துவிட்டது”, “அணில் மின் கம்பியில் சிக்கியுள்ளது”, “பியூஸ் வெடித்து விட்டது” போன்ற காரணங்களையே மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்ன என்பது குறித்து அதிகாரிகள் எவரும் தெளி வான விளக்கம் அளிக்கவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கீழக்கரையில் சிறு தொழில்கள், கடை கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பெருமள வில் மின்சாரத்தை நம்பியே செயல்பட்டு வரும் நிலையில், அடிக்கடி ஏற்படும் மின் வெட்டு காரணமாக தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.

தினசரி வருமானத்தை நம்பி வாழும் சிறு வியாபாரிகள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் மின் வெட்டு குறையாமல் அதிகரித்து வருவதாக வும், மின்தடை குறித்து முன்கூட்டியே அறி விக்க வேண்டும் என்ற அரசின் வழிகாட்டு தல்கள் கீழக்கரையில் முறையாக பின்பற் றப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் மின்வாரிய அதிகாரிகளின் செயல்பாடுகள் மீது மக்களி டையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

தொடர் மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியமா, போதுமான பணியாளர்கள் இல்லாத நிலையா அல்லது மக்களின் பிரச்ச னைகளை கண்டுகொள்ளாத நிர்வாகப் போக்கா என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

மின்வெட்டு காரண மாக அன்றாட வாழ்க்கை மட்டுமின்றி, மாண வர்களின் கல்வி, நோயாளிகளின் சிகிச்சை மற்றும் வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப் பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பலமுறை மனுக்கள் மற்றும் கோரிக்கை கள் அளித்தும் மாவட்ட நிர்வாகம் உறுதி யான நடவடிக்கை எடுக்காதது ஏமாற்ற மளிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

கீழக்கரையில் நிலவும் மின்வெட்டு பிரச்சனையை மாவட்ட நிர்வாகம் அவசர முன்னுரிமையுடன் கையாள வேண்டும் என்றும், மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் மக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

“காரணங்களைக் கூறுவதில் அல்ல, தீர்வை வழங்குவதில்தான் நிர்வாகத்தின் திறமை வெளிப்படுகிறது.

கீழக்கரை மக் களை இருளில் தள்ளும் இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உட னடியாக தலையிட வேண்டும்” என்பதே அப் பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.