எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் ஈனத்தனமானது; தமிழகத்திற்குத் தலைகுனிவு
11 Apr 2026, 5:30 am

எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் ஈனத்தனமானது; தமிழகத்திற்குத் தலைகுனிவு

திண்டுக்கல், அக்.10- "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்துள்ள விமர்சனம் ஈனத்தனமானது; இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது" எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடுமையாகச் சாடினார்.

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில்குமாரை ஆதரித்து விற்பனைப்பண்ணை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசினார். தரம் தாழ்ந்த அரசியல் விமர்சனங்கள் முதலமைச்சரைப் பார்த்து 'அரசியல் ரோடு இருக்கிறது' என்று எடப்பாடி பழனிசாமி கேட்டிருப்பது நாகரிகமற்றது என கி.வீரமணி குறிப்பிட்டார்.

"தங்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது தெரிந்து விட்டதால், எடப்பாடி பழனிசாமி மேலும் வாய்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார். இது பெரியார் மண், ஸ்டாலின் மீண்டும் ஆட்சியில் அமர்வது உறுதி. தரம் தாழ்ந்த விமர்சனங்களால் மக்களை திசை திருப்ப முடியாது" என்றார்.

விஜய் மற்றும் அதிமுக குறித்த சாடல் நடிகர் விஜய் குறித்துப் பேசுகையில், "சினிமாவிலிருந்து வந்து ஸ்டைல் காட்டியே சேர வேண்டியவர். நேரடியாகக் கல்லூரியின் முதல்வர் (Principal) ஆகியேன் என அவர் பிதற்றுவது போன்றதுதான் திண்டுக்கல்லில் கி.வீரமணி கண்டனம்! விஜய்யின் பேச்சு" என ஒப்பிட்டார்.

மேலும், அதிமுகவில் இப்போது அண்ணாமலை இல்லை, எம்.ஜி.ஆர் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தைத் தில்லிக்கு அடமானம் வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி எனச் சாடினார். "கையாலாகாத இந்த எடப்பாடி என்று ஜெயலலிதா கேட்டிருப்பார். ஆனால் இப்போது அதிமுக சப்பைக் கட்டுகளின் தில்லிக்கு ஓடும் முதுகெலும்பற்ற தலைவர்களாக அதிமுகவினர் மாறிவிட்டனர்" என்றார்.

அதிகாரிகள் மாற்றமும் வாக்காளர்களும் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றப்படுவது குறித்துப் பேசிய கி.வீரமணி, "தமிழகத்தின் நலனைப் பாதுகாக்கும் பகுத்தறிவுடன் கூடிய முதலமைச்சராக ஸ்டாலின் இருப்பார். அவருக்குத் தொல்லை கொடுக்கவே அதிகாரிகளை மாற்றியப் பூச்சாண்டி காட்டுகின்றனர்" என்றார்.

"நீங்கள் யாரை வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால் தமிழ்நாட்டு வாக்காளர்கள் மாற மாட்டார்கள். குஜராத்திலிருந்தோ, உத்தரப் பிரதேசத்திலிருந்தோ வாக்காளர்களை இறக்குமதி செய்ய முடியாது. வரும் தேர்தலில் மக்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்துத் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என கி.வீரமணி பேசினார்.