“மோடி இந்தியாவையும், டிரம்ப் உலகத்தையும் அழித்து வருகிறார்கள்”
yesterday
<p><strong>“மோடி இந்தியாவையும், டிரம்ப் உலகத்தையும் அழித்து வருகிறார்கள்”</strong></p><p>பெங்களூரு காங்கிரஸ் சார்பில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,”பிரதமர் மோடி இந்தியாவையும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலகத்தையும் அழித்து வருகிறார்கள். மோடி-டிரம்ப் கூட்டணி இந்தியாவிற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் தீங்கு விளைவித்து வருகிறார்கள். ஒன்றிய அரசாங்கம் வேலையின்மையை தீவிரமாக உருவாக்குகிறது. தவறான தகவல்களைப் பரப்புகிறது. தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மீறப்படுகின்றன. பணவீக்கம் ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. மாணவர்களுக்கு நல்ல பாடங்களை கற்பிப்பதை விட என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்வதே மோடி அரசின் முதல் வேலையாக உள்ளது. ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகிகளை நியமிக்கின்றனர். கல்வியைக் காவிமயமாக்குவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்” என அவர் பேசினார்.</p>
