முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

11 Aug 2026, 8:36 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் செய்யவில்லை. வினாத்தாள் கசிவு, ஜந்தர் மந்தர் தடியடி, ராமர் கோவில் என மூன்று பிரச்சனைகள் இருக்கின்றன. 18 நாட்கள் ஆகியும் கூட இதில் விளக்கம் அளிக்க ஒன்றிய அரசிடம் இருந்து எவ்வித ஆர்வமும் காட்டப்படவில்லை. மாறாக ஏதேனும் கருத்துகளை அவசர கோலத்தில் அள்ளித் தெளித்துவிட்டு ஓடிவிடுகின்றனர்.

வடகிழக்கு பத்திரிகையாளர் யூனிட்

அதானி நம் நாட்டின் பிரதமர் மோடியை மட்டுமல்ல, அமெரிக்காவையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார். ரூ.83,000 கோடி கொடுத்து தனது லஞ்ச வழக்கையே வாபஸ் பெற்றுள்ளார். அமெரிக்க நீதிமன்றம் கூட கண்டனம் தெரிவிப்பது போல, பாசாங்கு செய்து அதானி வழக்கை ரத்து செய்துள்ளது.

யுவதேசம் ஊடகம்

மாணவர்கள் போராட்டத்தை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் ஜார்க்கண்டில் வன்முறையைகட்டவிழ்த்துவிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெற்றுவருவதால், ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்க அண்டை மாநிலங்களில் இருந்து குண்டர்களை மாணவர்களாக மாற்றி வன்முறையை தூண்டிவிட்டுள்ளது பாஜக.

சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே

நாட்டிற்கு மாணவர்கள் நலனே முக்கியம். அது ஜந்தர் மந்தராக இருந்தால் என்ன? ஜார்க்கண்டாக இருந்தால் என்ன? மாணவர்கள் மீதான காவல்துறை வன்முறை கொடூரமானது; மனிதத் தன்மையற்றது. இந்தியாவில் மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்த வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram