தீக்கதிர் முக்கிய செய்திகள்
yesterday

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

இன்று, ஒட்டுமொத்த நாடே சட்டவிரோதத் தேர்தல்களின் அடிப்படையில் இயங்குகிறது. மோடி ஒரு சட்டவிரோதப் பிரதமர்; அமித் ஷா ஒரு சட்டவிரோத அமைச்சர்; மேலும் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து முதலமைச்சர்களும் சட்டவிரோதமாகவே அந்தப் பதவிகளில் உள்ளனர். இவை ரத்து செய்யப்பட்டு, வாக்குச்சீட்டுகள் மூலம் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

ஞானேஷ் குமார் வெறும் ‘வாக்குத் திருடர்’ மட்டுமல்ல; கடந்த 2006ஆம் ஆண்டு கேரளப் பொதுப்பணித்துறைச் செயலாளராகப் பணியாற்றியபோது அவர் ‘சாலைத் திருட்டிலும்’ ஈடுபட்டவர். மலேசிய பொறியாளரான லீ சீ பீனிடம் ஞானேஷ் குமார் லஞ்சம் கேட்டதால், அவர் வேறு வழியின்றி விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். அப்போது தப்பித்துவிட்டார். இனி தப்பிக்க முடியாது.

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

போராட்டம் என்றாலே மோடி, அமித் ஷா ஆகியோரின் உத்தரவின் பேரில் தில்லிப் பகுதி முழுமையாக முடக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அதிக அளவில் மக்கள் வீதிக்கு வர மட்டுமே வழிவகுக்கும் என்பதை மோடியும், அமித் ஷாவும் உணரவில்லை. மக்களின் எழுச்சிக்கு முன்னால் அரசால் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை.

நாகா மாணவர்கள் முன்னணி

பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான போராட்டம் என்றால் மட்டுமே தில்லி காவல்துறை வீதிக்கு வருகிறது; ஆனால், பெண்கள் பாதுகாப்பு என்று வரும்போது வெளியே வருவதில்லை. இது ஏன்?