தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.10 மதிப்புள்ள டயாப்பர் கசிவதில்லை; நீட் வினாத்தாள் கசிந்து விடுகிறது

13 May 2026, 9:09 pm
ரூ.10 மதிப்புள்ள டயாப்பர் கசிவதில்லை; நீட் வினாத்தாள் கசிந்து விடுகிறது

ரூ.10 மதிப்புள்ள டயாப்பர் கசிவதில்லை; நீட் வினாத்தாள் கசிந்து விடுகிறது

பாட்னா நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பிரபல கல்வியாள ரும், யூடியூப்பருமான கான் சார் இந்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,”தேசிய தேர்வு முகமை என்பதை இனி ‘நம்பிக்கையற்ற முகமை (Non Trusted Agency)’ என்றே அழைக்க வேண்டும்.

ஒவ் வொரு முறையும் வினாத்தாள் கசி கிறது, தேசிய தேர்வு முகமையால் ஒழுங்காக சாதாரண ஒரு தேர்வை நடத்த முடியவில்லை.

தேசிய தேர்வு முகமை என்பது ஒரு சாதாரண டெம்போ (4 சக்கர வாகனம்) போன்றது.

அதை ஒரு பெரிய விமானத்தைப் போல வானத்தில் பறக்க வைக்க முயற்சி செய்கிறார்கள், அது அவர்களால் முடியவில்லை.

ரயில்வே பிளாட்பாரங்களில்... நடப்பாண்டு நீட் தேர்வை சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள னர்.

அதில் குறைந்தது 5 லட்சம் மாணவர்கள் ரயில்வே பிளாட் பாரங்களில் பாய் விரித்துப்படுத் துத் தூங்கி கஷ்டப்பட்டுத் தேர்வு எழுத வந்தவர்கள்.

அவர்களை மீண்டும் தேர்வு எழுதச் சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை? நாங் கள் பணத்தைத் திருப்பித் தரு கிறோம் என்று தேசிய தேர்வு முகமை சொல்கிறது.

மாணவர் களின் பணத்தைப் பறித்து என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்களின் வாழ்க்கையை அல்லவா பறித்தி ருக்கிறீர்கள்! மாணவிகளின் எதிர்காலம் எத்தனையோ மாணவிகளின் எதிர்காலத்தை தேசிய தேர்வு முகமை சிதைத்துள்ளது.

வினாத் தாள் கசிவு என்பது வெறும் பேப்பர் கசிவு அல்ல, அது மாணவர்களின் வாழ்க்கை சிதைக்கப்படுவது.

பல மாணவிகளுக்கு இதன் காரண மாகத் திருமணம் நிச்சயம் செய் யப்படலாம் அல்லது மீண்டும் தேர்வு எழுத வீட்டிலிருந்து அனுப் பப்படாமல் போகலாம்.

அரசை விட டெலிகிராம் பெரியதா? வினாத்தாள் கசிந்திருப்பதை மாணவர்கள் தான் கண்டுபிடித்துச் சொன்னார்கள்.

தேசிய தேர்வு முகமை என்ன செய்து கொண்டிருந் தது? ஒரு அரசாங்கத்தை விட டெலிகிராம் (Telegram) செயலி பெரியதாகிவிட்டதா? அரசாங்கத் தின் மூக்கிற்கு அடியில் டெலி கிராம் மூலம் தேசிய தேர்வு முகமை யை கேலிப் பொருளாக்கி விட்டுச் செல்கிறார்கள்.

கடுமையான தண்டனை தேவை வினாத்தாள் கசிவு தொடர்பாக முதலில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஐஐடி அல் லது யுபிஎஸ்சி தேர்வுகளில் இது போல நடப்பதில்லை. 2024இல் குளறுபடிகள் நடந்தபோது யாருக்குத் தண்டனை கிடைத்தது? வினாத்தாளைக் கசிய விடுபவர் களுக்கு தூக்குத் தண்டனை வழங் கப்பட வேண்டும்.

கோடிக்கணக் கில் சம்பாதிக்கும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுச் சிறை தண்டனை என்பது எதற்கும் உதவாது.

சிபிஐ அதிகாரிகள் இந்த மாணவர்களிட மிருந்து பாடம் கற்க வேண்டும். ரூ.10 மதிப்புள்ள குழந்தைகளின் டயாப்பர் ரூ.10 மதிப்புள்ள குழந்தை களின் டயாப்பர் கசிவதில்லை. ஆனால் நீட் வினாத் தாள் மட்டுமே கசிந்துவிடுகிறது.

நாங்களும் வினாத் தாள்களைத் (மாதிரி தேர்வுக்காக) தயாரிக்கிறோம், ஆனால் அவை கசிவதில்லை.

அப்படியிருக்கையில் நீட் வினாத் தாள் மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் கசிகிறது? இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், பிரதமரின் அலுவல கமும் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்.

தவறு செய்தவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.