ராணிப்பேட்டை நகராட்சியில் கே.எச். நிறுவனம்
10 Nov 2025, 5:08 pm
<p>ராணிப்பேட்டை நகராட்சியில் கே.எச். நிறுவனம் சாலை சந்திப்பு, வி.சி.மோட்டூர் சாலை சந்திப்பு, காரை கூட்டு ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள தாங்கும் தூண் பகுதிகள் ஆகியவற்றை ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் அழகுப்படுத்தும் பணிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி திங்களன்று (நவ. 10) அடிக்கல் நாட்டினார். இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, நகர்மன்றத் தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் செல்வகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரிபுரசுந்தரி, நகர்மன்ற உறுப்பினர்கள் குமார், வினோத், பூங்காவனம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
