தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை கேரளம் அமல்படுத்தாது!

28 Nov 2025, 2:28 pm
மோடி அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை கேரளம் அமல்படுத்தாது!
<p><strong>மோடி அரசின் தொழிலாளர் விரோதச் சட்டங்களை கேரளம் அமல்படுத்தாது!</strong></p> <p>அமைச்சர்&nbsp; வி. சிவன் குட்டி அறிவிப்பு</p> <p>திருவனந்தபுரம், நவ. 28 - ஒன்றிய பாஜக அரசு அறிவிக்கை செய்துள்ள, தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளை தங்கள் மாநிலம் நடைமுறைப்படுத்தாது என்று கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் வி. சிவன் குட்டி அறிவித்துள்ளார். அத்துடன், இந்த சட்டத் தொகுப்பு களைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை கேரளம் வலியுறுத்துவ தாகவும், இதுதொடர்பாக, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய தொழிற் சங்கங்களின் தலைவர்களையும் உள்ளடக்கி, சட்டநிபுணர்கள், தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களை ஒன்றிணைத்து டிசம்பர் 19 அன்று திருவனந்தபுரத்தில் ஒரு தேசிய அளவிலான தொழிலாளர் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும் சிவன்குட்டி கூறியுள்ளார். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வி. சிவன் குட்டி மேலும் கூறியிருப்பதாவது: &nbsp;புதிய 4 தொழிலாளர் சட்டத்தொகுப்பு கள் பிரச்சனையில், ஏற்கெனவே தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பங்கேற்ற ஒரு கருத்த ரங்கம், 2022 ஜூலை 2 அன்று நடைபெற்றது. அதில், ஒன்றிய அரசு கொண்டு வர உத்தேசித்திருந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. &nbsp;கடந்த நவம்பர் 11 &nbsp;மற்றும் 12 ஆகிய தேதிகளில், தில்லியில் நடந்த மாநில தொழி லாளர் நலத்துறை அமைச்சர்கள் கூட்டத்திலும், ​​கேரள அரசின் ஆட்சேபணை களை ஒன்றிய தொழிலாளர் அமைச்சரிடம் நேரடியாகத் தெரிவித்தோம். எனினும், ஒன்றிய அரசு 4 புதிய சட்டத் தொகுப்புகளையும், அமலுக்கு கொண்டு வந்து விட்டதாக அறிவித்துள்ளது. எனவே, 4 சட்டத் தொகுப்புகளையும் தற்போது அமல்படுத்த வேண்டாம் என கேரளம் முடிவு செய்துள்ளது. இந்த பிரச்சனையில் தொழிற்சங்கங் களுடன் ஒரு கலந்தாலோசனை கூட்டம் உடனடியாக நடத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி என்ன ஆனது, எனத் தெரியவில்லை. எனவே, அகில இந்திய அளவில் இந்தப் பிரச்சனை குறித்து விரிவான விவாதத்தை முன்னெடுத்து புதிய சட்டங்களை முறியடிப்பதற்கான ஆதரவை திரட்டுவதற்காக ஒரு மாநாட்டை கேரள அரசு நடத்தும். தொழிலாளர்களின் நலன்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பிறகே புதிய சட்டங்களில் உரிய முடிவை கேரள அரசு எடுக்கும். இவ்வாறு அமைச்சர் சிவன்குட்டி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.