இடதுசாரி அரசின் வரலாற்றுச் சாதனைகளை சிறுமைப்படுத்தும் சதீசன் அரசு - அ.அன்வர் உசேன் வெள்ளை அறிக்கையா? பொய்களின் அறிக்கையா?
19 Jun 2026, 9:14 pm

இடதுசாரி அரசின் வரலாற்றுச் சாதனைகளை சிறுமைப்படுத்தும் சதீசன் அரசு - அ.அன்வர் உசேன்

வெள்ளை அறிக்கையா? பொய்களின் அறிக்கையா?

கேரளாவில் பத்தாண்டு காலம் ஆட்சி புரிந்த பினராயி விஜயன் அரசாங்கம், சமூக குறியீடுகளில் மட்டுமின்றி தொழில் துறையிலும் பல சாதனைகளைப் புரிந்தது. எனினும் தேர்தலில் தோல்வி எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. புதிதாக ஆட்சி அமைத்த காங்கிரஸ் கூட்டணியினர், இடது ஜனநாயக அரசாங்கத்தின் சாதனைகளை மறைக்கவும் சிறுமைப்படுத்தவும் முனைகின்றனர். அதற்காக அவர்கள் எடுத்துள்ள முதல் ஆயுதம் நிதி நிலைமை குறித்தானது. “கேரள கஜானா காலி” என தேர்தல் பிரச்சாரம் செய்தவர்கள், இப்பொழுது மக்க ளின் சிந்தனையில் இதனை நிலைநிறுத்த “வெள்ளை அறிக்கை” வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் பினராயி அரசாங்கத்தின் சாதனைகளை மறைக்க இயலவில்லை. எனினும் மாற்றம் என்ற பெயரில் தனியார்மயம் உட்பட பாஜக ஒன்றிய அரசின் நவீன தாராளமய கொள்கைகளை அமலாக்கவும், கேரளாவை பின்னுக்கு கொண்டு செல்லவும் வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கேரள மக்களும் இடது ஜனநாயக முன்னணியும் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என்பதை காங்கிரஸ் கூட்டணி குறைத்து மதிப்பிடுகிறது.

நிதி நிலைமையில் இடது அரசின் சாதனைகள்

பினராயி அரசாங்கத்தின் 10 ஆண்டுகால ஆட்சி யில் கோவிட் பெருந்தொற்றும் இரு முறை வயநாடு இயற்கை பேரழிவும் நிகழ்ந்தன. இச்சூழல்களை எதிர்கொள்ள ஏராளமான நிதி தேவைப்பட்டது. இத்தகைய சூழல்களிலும், ஒன்றிய அரசின் கடுமை யான நிதி குறைப்பிற்கு இடையிலும் பினராயி விஜயன் அரசாங்கம் கீழ்க்கண்ட நிதி முன்னேற்றங்க ளைச் சாதித்துள்ளது:

கேரளாவின் சொந்த வரி வருவாய் ரூ. 42,167 கோடியிலிருந்து 81,627 கோடியாக 93.5% உயர்வு.

மாநிலங்களின் நிதி பற்றாக்குறை (fiscal deficit) அகில இந்திய அளவில் 2.7% ஆக இருக்கும் பொழுது கேரளா 2.5% ஆக குறைத்தது.

வருவாய் பற்றாக்குறை (revenue deficit) 2.41% லிருந்து 0.89% ஆக குறைந்தது.

மாநில அரசின் கடன் கோவிட் காலத்தில் 40.3% ஆக இருந்தது பின்னர் 35.5% ஆக குறைந்தது.

இக்கடன் அளவு அதிகமாக இருந்தாலும், இயற்கை பேரழிவுகள் மற்றும் கோவிட் சூழல் மட்டுமே காரணமல்ல; 2016ஆம் ஆண்டு அன்றைய உம்மன் சாண்டி அரசாங்க காலத்திலேயே கடன் அதிக அள வில்தான் இருந்தது.

கேரளாவின் மூலதன செலவுகள் ஆண்டுக்கு ரூ.21,635 கோடியிலிருந்து ரூ.30,961 கோடியாக 43% உயர்ந்தது. வருவாயில் மூலதன செலவுகளின் பங்கு ரூ.3,818 கோடியிலிருந்து ரூ.8,613 கோடியாக இரு மடங்கு க்கும் அதிகமாக உயர்ந்து உற்பத்தி அடித்தளம் அதிகரித்தது. பல பாதகமான சூழல்களுக்கு இடையே இத்தகைய நிதி முன்னேற்றங்களை சாத்தியமாக்கி யதை அங்கீகரிக்க வெள்ளை அறிக்கை மறுக்கிறது. இந்த உண்மைகளை மறைக்க இயலாமல், அதை பிர தான அறிக்கையில் குறிப்பிடாமல், பின்னால் உள்ள இணைப்புகளில் கூற வேண்டிய கட்டாயம் சதீசன் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. பொதுவாக இணைப்புகளை எவரும் கவனிக்க மாட்டார்கள் எனும் உளவியலை பயன்படுத்திக்கொள்ள சதீசன் அர சாங்கம் எத்தனிக்கிறது.

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சந்தித்த ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை இந்த வெள்ளை அறிக்கை மறைத்து விடுகிறது. நிதி ஆணையம் கேரளாவுக்கு அளித்த நிதி ஒதுக்கீடு 3.875%லிருந்து 1.925% ஆக கடுமையாகச் சரிந்தது. கடும் எதிர்ப்பு காரணமாக 2.382% ஆக உயர்ந்தாலும் பழைய நிலையை எட்ட வில்லை. இதன் மூலம் கேரளா ரூ. 37,814 கோடியை இழந்தது. அதனை அப்பொழுதும் காங்கிரஸ் கேட்கவில்லை; இப்பொழுதும் மறைக்க முயல்கிறது. நிதி சுயாட்சியை மிகக் கடுமையாகச் சிதைத்தது மோடி தலைமையிலான ஒன்றிய அரசாங்கம். இதனால் கேரளா கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த ஆபத்தை வெள்ளை அறிக்கை அங்கீகரிக்க மறுக்கிறது.

மாநிலங்களுக்கு அளிக்கும் நிதியை மறுப்பது மட்டுமல்ல; வெளிச்சந்தையில் கடன் வாங்கவும் ஒன்றிய அரசாங்கம் முட்டுக்கட்டைகளைப் போட்டது. தமிழ்நாடு, மகாராஷ்டிர மாநிலங்களைப் போல அல்லாமல், தொழிற்சாலைகள் குறைவாக இருந்த தால் ஜி.எஸ்.டி. வருவாய் போதுமான அளவு கிடைக்க வில்லை. இதனால்தான் கிப்பி (KIIFB) அமைப்பின் மூலம் நிதியாதாரத்தைப் பெற பினராயி அரசாங்கம் முடிவு செய்தது. இப்பொழுது இதனை விமர்சிக்கும் வெள்ளை அறிக்கை, கிப்பியின் நன்மைகளை மறைக்க எத்தனிக்கிறது.

கிப்பி(KIIFB) மூலம் சாதனைகள்

“கிப்பி” மூலம் ஏராளமான கட்டமைப்பு வசதி கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், சாலை கள் உருவாகின. கல்வியில் மட்டும் இது எத்தகைய சாதனைகளை உருவாக்கியது என்பதை நிதி ஆயோக் வெளியிட்ட கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து அறியலாம்:

கிப்பி மூலம் சுகாதாரத் துறை மற்றும் சாலை வசதி களும் ஏராளமாக உருவாக்கப்பட்டன. கிப்பி கடன் பற்றி விரிவாகப் பேசும் வெள்ளை அறிக்கை, இந்த கட்டமைப்பு வசதிகள் பற்றி மௌனம் காக்கிறது. ஒன்றிய அரசின் முட்டுக்கட்டைகளையும், செஸ் மூலம் வரியைப் பெருக்கியதையும் பேசக்கூட இந்த அறிக்கை தயாராக இல்லை.

மோசமான தீர்வுகள்

நிதி நெருக்கடியை மிகைப்படுத்திக் கூறும் இந்த அறிக்கை முன்வைக்கும் ஆலோசனைகள் மிக ஆபத்தானவை. சுகாதாரம், கல்வி, மருத்துவம், பொது விநியோகம், மின்சாரம், போக்குவரத்துச் செலவு களைப் பெருமளவு குறைக்க வேண்டும் என அறிக்கை சொல்கிறது. ஒரு ஜனநாயக அரசாங்கம் மக்க ளுக்குத் தர வேண்டிய குறைந்தபட்ச வசதிகள் இவை. இவற்றில் லாப நோக்கத்திற்காகத் தனியாரை அனு மதிப்பது மோசமான அரசியல் அணுகுமுறை. அதுவே நவீன தாராளமயக் கொள்கை கூறும் வழிமுறை. மற்ற மாநில காங்கிரஸ் அரசாங்கங்கள் செய்வது போல, கேரளாவிலும் தனியார்மயம் நோக்கிச் செல்லும் முனைப்புகள் முன்வைக்கப்படுகின்றன.

கல்வி சார்ந்த குறியீடுகள் உம்மன் சாண்டி அரசாங்கம் பினராயி அரசாங்கம்

11ஆம் வகுப்பு சேர்க்கை 71.40% 89.50%

பெண் கல்வி 75.69% 91.70%

12ஆம் வகுப்பு இடைநிற்றல் 14.50% 4.80%

வகுப்புகளில் இணைய வசதி 25.50% 91.70%

மின்சார வசதி தரவு இல்லை 99.70%

ஸ்மார்ட் வகுப்பறைகள் 15.20% 59.70%

கழிப்பறை வசதிகள் தரவு இல்லை 99.50%

அதே போல நட்டத்தில் இயங்கும் மாநில பொ துத்துறைகளை மூடுவது அல்லது விற்பது என்பதும் முன்வைக்கப்படுகிறது. பல பொதுத்துறைகளைத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களின் ஒத்துழைப் போடு இடது ஜனநாயக அரசாங்கங்கள் லாபமீட்டும் வகையில் மீட்டுள்ளன. ஆனால், சதீசன் அரசாங்கம் இதனை முயற்சிக்கும் சிந்தனையில் இல்லை. மின்சாரம், போக்குவரத்தில் தனியார் பங்கு பற்றி இந்த அறிக்கை பேசுவது மக்கள் நலனுக்கு விரோதமானது.

அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 58லிருந்து 60 என உயர்த்துவது இளைஞர்களின் வேலை வாய்ப்புகளைப் பாதிக்கும். இதுவரை அரசுப் பணிக ளில் உருவான வாய்ப்புகளில் 60% இடது ஜனநாயக அரசுகள் சாதித்தவை. இதனை மாற்றியமைக்க சதீசன் அரசாங்கம் முயல்கிறது. வருவாயின் பெரும் பகுதி ஊதியம், ஓய்வூதியத்துக்குச் செலவாகிறது எனக் கூக்குரலிடுவது ஊதிய முடக்க அபாயச் சங்கை ஊதுவது ஆகும். 5 ஆண்டு ஊதிய ஒப்பந்தங்களை 10 ஆண்டுகளாக உயர்த்தவும், கனிம மற்றும் கடல்சார் வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கவும் முயலும் முனைப்புகள் அறிக்கையில் உள்ளன.

ஒட்டுமொத்தமாக, கேரளா கடந்த 10 ஆண்டு களில் சாதித்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் அணுகு முறையை சதீசன் அரசாங்கம் பின்னுக்குத் தள்ள முனைகிறது. நவீன தாராளமயக் கொள்கைகளில் தங்களுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் வேறுபாடு இல்லை என்பதை காங்கிரஸ் மீண்டும் நிலைநாட்ட முயல்கிறது. கேரள மக்களும் இடது ஜனநாயக சக்திகளும் இதனை அனுமதிக்கப்போவது இல்லை.