முந்தய பக்கம்

கடையம் அருகே கேரள மாநில கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு காவல்துறை தொடர் விசாரணை

20 Jul 2026, 10:16 pm
கடையம் அருகே கேரள மாநில கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு காவல்துறை தொடர் விசாரணை
<p><strong>கடையம் அருகே கேரள மாநில கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு காவல்துறை தொடர் விசாரணை</strong></p><p>தென்காசி, ஜூலை 20 - தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பகுதியில் கேரள மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கடையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசார ணையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உத்தரவின் பேரில், ஆலங்குளம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கிளாட்சன் ஜோஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். கடையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கழிவுகளை கொண்டு வந்து கொட்டியவர்கள் யார் என்பதை கண்டறிவதற்கும், கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram