தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் யுடிஎப் அரசின் கொள்கைத் தோல்வி!

yesterday
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் யுடிஎப் அரசின் கொள்கைத் தோல்வி!

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் யுடிஎப் அரசின் கொள்கைத் தோல்வி!

கேரளாவில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள வி.டி. சதீசன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி (யுடிஎப்) அரசு, ஒன்றிய பாஜகஅரசின் ‘பிஎம் ஸ்ரீ’ திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான விசயத்தில் எடுத்துள்ள வெளிப்படைத்தன்மையற்ற, முரண்பாடான நிலைப்பாடு அதன்சித்தாந்த ரீதியான வீழ்ச்சியையும் கொள்கைத் தோல்வியையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒன்றிய பாஜக அரசின் தேசியக்கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்தும், இத்திட்டத்தில் முந்தைய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்கையெழுத்திட ஆலோசித்ததை ‘காவிமயமாக்கல்’ என்றும் சாடிய காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள்,அதிகாரத்திற்கு வந்தவுடன் ஒரே அடியாக தலைகீழ்பல்டி அடித்துள்ளனர்.

ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ள 1,158.13 கோடி ரூபாய் கல்வி நிதியைப் பெறுவதற்காகவே இத்திட்டத்தைச்செயல்படுத்துவதாகக் கூறித்தப்பித்துக் கொள்ள யுடிஎப் அரசு முயல்கிறது. முதலமைச்சர் வி.டி. சதீசனும், யுடிஎப் அமைப்பாளர் அடூர் பிரகாஷும் இத்திட்டம் குறித்து அடுத்தடுத்து முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்துமக்களின் கவனத்தைத் திருப்பப் பார்க்கின்றனர். “ஒப்பந்தத்தில் இருந்து விலக மாநிலத்திற்கு அதிகாரமில்லை” என்றும், “முந்தைய அரசின் முடிவைத்தொடர்கிறோம்” என்றும் சாக்குப்போக்கு கூறும் யுடிஎப் தலைவர்கள், தேசியக் கல்விக் கொள்கையை மாநிலக் கல்வி முறைக்குள் திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டத்திற்குப் பலியாகியுள்ளனர்.

முந்தைய எல்டிஎப் அரசு உடனடியாக அந்தயோசனையைக் கைவிட்டு, தனது மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்றது நினைவு கூரத்தக்கது.

கல்விப் பாடத்திட்டத்தில் ஒன்றிய அரசின்தலையீடு, என் சி இ ஆர் டி வழிகாட்டுதல்கள்மற்றும் மாநில சுயாட்சி மீதான தாக்குதல்களை உணர்ந்தும், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பாஜகவின்திட்டத்திற்கு அடிபணிவது வெட்கக்கேடானது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஒன்றிய அரசின் நிதி மிரட்டலுக்குப்பணியாமல் சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தங்களின் மாநிலக் கல்வி உரிமையைப் பாதுகாத்துப் போராடி வரும் நிலையில், யுடிஎப் அரசின் இந்தச் சரணாகதி அரசியல் அம்மாநிலப் பொதுக் கல்வித்துறைக்கே பேரபாயமாக உருவெடுத்துள்ளது.

அமைச்சரவை உபகுழு அமைத்து நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, மாநிலக் கல்வி சுயாட்சியைக் காக்கவும், சங் பரிவாரத்தின் கல்விக் கொள்கையைத் தடுத்து நிறுத்தவும் யுடிஎப் அரசு உடனடியாகஉறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநில உரிமைகளையும் மதச்சார்பற்ற கல்வி அமைப்பையும் ஒன்றிய பாஜக அரசிடம் அடகு வைக்கும் யுடிஎப் அரசின் இந்த இரட்டை வேடத்தையும் கொள்கையற்ற போக்கையும் அம்மாநில முற்போக்குச் சக்திகளும் மக்களும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.