கருவூலம் காலி என்ற யுடிஎப் பொய்ப் பிரச்சாரம் அம்பலமானது ரூ.5,429 கோடி இருப்பதை உறுதியப்படுத்தியது தகவல் அறியும் உரிமை ஆவணம்
24 May 2026, 8:35 pm

கருவூலம் காலி என்ற யுடிஎப் பொய்ப் பிரச்சாரம் அம்பலமானது ரூ.5,429 கோடி இருப்பதை உறுதியப்படுத்தியது தகவல் அறியும் உரிமை ஆவணம்

திருவனந்தபுரம் கேரள சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக் கைக்கு முன்னதாக, மே 1 அன்று,”இடது ஜனநாயக முன் னணி (எல்டிஎப்) அரசு பதவி வில கும்போது கருவூலம் காலியாகி விடும்.

கேரள மாநிலம் திவாலாகி விட்டது” என மூத்த காங்கிரஸ் தலை வர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யுடிஎப்) தலைவர்கள் ஆதார மின்றி பேசியது பெரும் விவா தத்தை ஏற்படுத்தின.

தற்போது முதலமைச்சராக இருக்கும் வி.டி.சதீசனும் கூட அப்போது,”கருவூலம் தொடர்பாக யுடிஎப் அரசு ஒரு வெள்ளை அறிக் கையை வெளியிடும்” என்று கூறி யிருந்தார்.

வாக்கு எண்ணிக்கைக் குப் பிறகு கேரளத்தில் யுடிஎப் ஆட்சியை கைப்பற்றியது.

எனி னும் எல்டிஎப் அரசில் நிதியமைச்ச ராக இருந்த கே.என்.பாலகோபால் விமர்சனத்திற்குப் பதிலடியாக,” கருவூலம் காலி என்ற யுடிஎப் தலை வர்களின் பிரச்சாரம் பொய்யானது.

கருவூலத்தில் ரூ.5,000 கோடிக்கு (சுமார் 6,000 கோடி ரூபாய் உபரி) அதிகமாக பணம் உள்ளது.

கரு வூலத்தில் பூனை தூங்குகிறது என்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி யின் கேலி ஆதாரமற்றது.

கருவூ லத்தில் பணம் இருப்பதால்தான் வாக்குறுதிகளைச் செயல்படுத்த முடிந்தது” என அவர் கூறியிருந் தார்.

இந்நிலையில், கே.என்.பால கோபாலின் தகவலை உறுதிப்படுத் தும் விதமாக பினராயி விஜயன் தலைமையிலான எல்டிஎப் அரசு பதவி விலகிய போது, கருவூ லத்தில் ரூ.5,429 கோடி மீதம் இருந்த தாக நிதித் துறையின் தகவல் அறி யும் உரிமை ஆவணம் வெளிப் படுத்துகிறது.

இதன் மூலம், மாநி லத்தின் நிதி நிலைமை வலுவாக இருப்பதும், அரசியல் நோக்கங்க ளுக்காகப் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதும் அம்பல மாகி உள்ளது.