கேரளா சுற்றுலாத்துறையின் புகைப்பட கண்காட்சி திரைக்கலைஞர் சுஹாசினி மணிரத்னம் பாராட்டு
8 Mar 2026, 3:42 pm
<p><strong>கேரளா சுற்றுலாத்துறையின் புகைப்பட கண்காட்சி திரைக்கலைஞர் சுஹாசினி மணிரத்னம் பாராட்டு</strong></p>
<p>சென்னை, மார்ச் 8- “இது மிகவும் அழகாக இருக்கிறது. கேரளாவின் இயற்கையும் கலாச்சாரமும் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை உண்மையோடும் அழகோடும் வெளிப்படுத் தும் புகைப்படங்களின் சிறந்த தொகுப்பு இது,” என்று முன்னணி திரைப்பட நடிகை யும் இயக்குநருமான சுஹாசினி மணிரத்னம் கூறினார். லலித் கலா அகாடமியில் கேரள சுற்றுலாக் கழகத்தின் அனைத்திந்திய புகைப்படக் கண்காட்சி ‘லென்ஸ்கேப் கேரளா’வை பார்வையிட்ட பிறகு இவ்வாறு அவர் கூறி னார். “இது கேரள சுற்றுலாத்துறையின் ஒரு அழகான முயற்சி. இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்ட விதமும் தொகுக்கப்பட்ட வித மும் பாராட்டத்தக்கது,” என்று அவர் கூறினார். இந்தக் கண்காட்சி கேரளாவின் அழகின் பல பரிமாணங்களை உண்மையோடும் இயல்போடும் பதிவு செய்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், “கேரளாவின் இயற்கை நிலப்பரப்புகள், கேரளாவின் மக்கள், கேரளாவின் கலாச்சாரம், கேரளாவின் நடன ங்களும் கலை வடிவங்களும் இருக்கின்றன. இப்போது லென்ஸ்கேப் கேரளா. இது ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார். தான் எப்போதும் கேரளாவுக்குச் சென்ற அனுபவங்களை ரசித்திருக்கிறேன் என்று கூறிய சுஹாசினி மணிரத்னம், “நான் சென்ற இடங்களை இவ்வளவு அழகாக இந்தப் படங்களில் காட்டியிருப்பதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்றார். கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் கூறுகையில், கேரளாவின் பெரிய நண்பரான சுஹாசினி இந்தக் கண்காட்சியை மிகவும் ரசித்தது மாநில சுற்றுலா துறைக்கும் தனிப்பட்ட முறையில் அவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதை அவரது பாராட்டுச் சொற்கள் காட்டுகின்றன என்றார்.</p>
