தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

புகைப்பட கலைஞர்கள் பார்வையில் கேரளம் சென்னையில் கண்காட்சி துவங்கியது

4 Mar 2026, 5:01 pm
புகைப்பட கலைஞர்கள் பார்வையில் கேரளம் சென்னையில் கண்காட்சி துவங்கியது

புகைப்பட கலைஞர்கள் பார்வையில் கேரளம் சென்னையில் கண்காட்சி துவங்கியது

சென்னை,மார்ச் 4- கேரள சுற்றுலாத்துறையின் ‘லென்ஸ்கேப் கேரளா’ புகைப்படக் கண் காட்சி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள  லலித் கலா அகாடமியில் புதன் கிழமை (மார்ச் 4) தொடங்கியது.  இக்கண்காட்சி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 10 புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்கள் கேரளா முழுவதும் எடுத்த 100 தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை காட்சிப் படுத்தியுள்ளது. புகைப்பட கண்காட்சி  மார்ச் 7 வரை, காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். மலையாள திரைக்கலைஞர் சீமா, மற்றும் எழுத்தாளரும், விமர்சகரும், Better Photography-இன் முன்னாள்  ஆசிரியருமான சதானந்த் மேனன், ‘லென்ஸ்கேப் கேரளா’ புகைப்படக் கண் காட்சியின் சென்னை பதிப்பை தொடங்கி வைத்தார். உருவப்படங்களிலிருந்து வாழ்வியல் கலாசாரங்கள் வரை, பரந்து விரிந்த இயற்கைக் காட்சிகள், வனவிலங்கு, மற்றும் அன்றாட தருணங்கள் வரை, இந்தக் கண்காட்சி பத்து தனித்துவமான காட்சிக் குரல்களைஒன்றிணைத்து, கடவுளின் தேசம் எனப்படும் கேரளத்தின் உற்சாகமிக்க, நவீன உருவப்படத்தை உருவாக்குகிறது. புகழ்பெற்ற கலை விமர்சகர் உமாநாயரால் தொகுக்கப்பட்டதும், விருது பெற்ற புகைப்படக் கலைஞர் பாலன்  மாதவன் இயக்கியதுமான ‘லென்ஸ்கேப் கேரளா’, ஹெச். சதீஷ், சிவாங் மேத்தா, அமித் பஸ்ரிச்சா, சௌரப் ஆனந்த் சட்டர்ஜி,  சைபல் தாஸ், உமேஷ் கோக்னா, மனோஜ் அரோரா, ஐஸ்வர்யா ஸ்ரீதர்,நடாஷா கார்தார் ஹெம்ராஜானி மற்றும் கௌந் தேய சின்ஹா ஆகியோரின் லென்ஸ்கள் மூலம் கேரளாவை காட்சிப்படுத்துகிறது. மார்ச் 5 அன்று, புகழ்பெற்ற புகைப் படக் கலைஞர்கள் பாலன் மாதவன், ஐஸ்வர்யா ஸ்ரீதர் மற்றும் சௌரப் ஏ. சட்டர்ஜி நடத்தும் இலவச புகைப்பட மாஸ்டர்கிளாஸ் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்தக் கண்காட்சி ஜனவரி 20 அன்று புதுதில்லியில் தொடங்கியது. சென்னை. பெங்களுரு, ஐதராபாத் உள்பட 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. மார்ச் 29 அன்று கொல்கத்தாவில் நிறைவடை கிறது. வடோதரா, அகமதாபாத்,புனே, மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் இதுவரை முடிவடைந்துள்ளன. சென்னைக்கு பிறகு, இந்தக் கண்காட்சி  ஹைதராபாத் மற்றும் சூரத் நகரில் நடை பெறவுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.