அழகு கிரீம் பூசியதால் விபரீதம் மாணவியின் சிறுநீரகம் பாதிப்பு
19 minutes before

அழகு கிரீம் பூசியதால் விபரீதம் மாணவியின் சிறுநீரகம் பாதிப்பு

திருவனந்தபுரம், நவ. 23-முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளைப் போக்குவதற்காகச் சமூக வலைதள விளம்பரத்தை நம்பி வாங்கிய அழகுசாதனக் கிரீமைப் (Fairness Cream) பயன்படுத்திய கேரளாவைச் சேர்ந்த 17 வயதுகல்லூரி மாணவி, உயிருக்கு ஆபத்தானசிறுநீரகப் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்.

விளம்பரத்தை நம்பி விலைகொடுத்து வாங்கிய விபரீதம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம்அரீக்கோடு பகுதியைச் சேர்ந்த 17 வயதுமாணவி ஒருவர், கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு ‘ஃபேர்னஸ் கிரீம்’ விளம்பரத்தைப் பார்த்துள்ளார். இரவு நேரங்களில் தொடர்ந்து பயன்படுத்தினால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள்முழுமையாக மறையும் என அந்த விளம்பரத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதை நம்பியமாணவி, விளம்பரத்தில் கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸ்அப் எண் மூலமாகத் தொடர்புகொண்டு அந்த கிரீமை ஆர்டர் செய்துவாங்கியுள்ளார். ஆரம்பத்தில் நல்ல பலன்தெரிந்ததால், அடுத்த ஒரு வருடத்திற்குத் தொடர்ந்து பல பாட்டில்களை வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளார்.

சீரழிந்த உடல்நலமும்அதிர்ச்சியூட்டும் மருத்துவப் பரிசோதனையும்

காலப்போக்கில் அந்த மாணவியின் உடல்நிலை மெல்ல மெல்ல மோசமடையத் தொடங்கியது. திடீரென ரத்த அழுத்தம் குறைவது, அடிக்கடி மயக்கம் ஏற்படுவது, கால்கள் வீங்குவதுபோன்ற பாதிப்புகளால் அவரால் நடக்கவோ, மாடிப்படிகளில் ஏறவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அரீக்கோட்டில்உள்ள ‘ஆஸ்டர் மிம்ஸ் மதர்’ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.அவரைப் பரிசோதித்த சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள், மாணவிக்கு ‘மெம்ப்ரனஸ் நெஃப்ரோபதி’ எனப்படும்மிகத் தீவிரமான சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், அவரது ரத்தத்தில் பாதரசத்தின் அளவு அபாயகரமான அளவிற்கு மிக அதிகமாக இருப்பதும் சோதனையில் தெரியவந்தது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட12,500 மடங்கு அதிக நச்சு

மாணவிக்குச் சிகிச்சையளித்த சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் எஸ். கௌரி இதுகுறித்துக் கூறுகையில், “பாதரசம் சிறுநீரகங்களின் வடிகட்டும் திறனைக் கடுமையாகச் சேதப்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார். அந்த மாணவி பயன்படுத்திய கிரீமைஆய்வகத்தில் பரிசோதித்த போது, அதில் 12,500 பிபிஎம் அளவிற்குப் பாதரசம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.ஆனால், அழகுசாதனப் பொருட்களில் பாதரசத்தின் அனுமதிக்கப்பட்ட அளவு 1 பிபிஎம்-க்கும் குறைவாகவேஇருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த மாணவி சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் குணமடைந்து வருகிறார்.

சட்ட நடவடிக்கைக்குத்தயாராகும் குடும்பத்தினர்

இந்தக் கடுமையான உடல்நலப் பாதிப்பு குறித்து அந்த கிரீம் நிறுவனத்திடம் தெரிவித்த போதும், அவர்களிமிருந்து எந்தவொரு திருப்திகரமான பதிலும் கிடைக்கவில்லை என்று மாணவியின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது உட்பட,சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது கடும்சட்ட நடவடிக்கை எடுக்கக் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். சட்ட நடைமுறைகள் நடந்து வருவதால், அந்தத் தயாரிப்பின் பெயரை அவர்கள் இன்னும் பொதுவெளியில் வெளியிடவில்லை.