தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரளத்தில் மீண்டும் ‘ஷிகெல்லா’ உயிரிழப்பு 4 வயது சிறுமி பலி; அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை

7 Jun 2026, 9:43 pm
கேரளத்தில் மீண்டும் ‘ஷிகெல்லா’ உயிரிழப்பு 4 வயது சிறுமி பலி; அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை

கேரளத்தில் மீண்டும் ‘ஷிகெல்லா’ உயிரிழப்பு 4 வயது சிறுமி பலி; அதிகரிக்கும் பாதிப்பு எண்ணிக்கை

கோழிக்கோடு கேரள மாநிலம் கோழிக் கோடு மாவட்டத்தில் ‘ஷிகெல்லா பாக்டீ ரியா’ தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. 1897இல் ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் கியோஷி ஷிகா என்ப வர் ‘ஷிகெல்லா’ பாக்டீரியாவை முதன்முதலில் கண்டுபிடித்தார். உலகளவில் ஆண்டுதோறும் ஷிகெல்லா பாதிப்பால் லட்சக்க ணக்கானோர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் அதிகள வில் பாதிக்கப்படுகின்றனர். இத்த கைய சூழலில், கடந்த மார்ச் மாதம் கோழிக்கோடு மாவட்டத்தின் பெரு வயல் கிராமத்தில் 63 பேருக்கு ஷிகெல்லா தொற்று பாதிப்பு கண்ட றியப்பட்டது. இதில் 3 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந் தது. தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட சுகாதார கட்டுப்பாடுகளால் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பர வல் கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில், ஜூன் மாதத்தில் இருந்து கோழிக்கோடு மாவட்டத் தில் மீண்டும் ஷிகெல்லா பாக்டீரியா பரவல் தொடங்கியுள்ளது. கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஷிகெல்லா பாக்டீரியாவால் பாதிக்கபட்ட 4 வயது குழந்தை உயிரிழந்துள் ளது. இதனால் கோழிக்கோட்டில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே. முரளீதரன் பேசுகையில், ”ஷிகெல்லா தொற்றின் காரணமாக மூன்று குழந்தைகள் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 குழந்தைகள் குண மடைந்து வீடு திரும்பிய நிலையில், தலக்குளத்தூரைச் சேர்ந்த நிலா என்ற நான்கு வயது சிறுமி சனிக்கிழ மையன்று உயிரிழந்தார். ஷிகெல்லா என்பது குடலை பாதிக் கும் ஒரு பாக்டீரியா தொற்று. இது வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி போன்ற அறிகுறி களை ஏற்படுத்துகிறது. இந்த நோய் முக்கியமாக மாசுபட்ட உணவு, நீர் மூலம் பரவுகிறது. இது பரவாமல் தடுக்க கடுமையான சுகாதார நடை முறைகள் அவசியமாகும். கடந்த வாரம் ஆலப்புழா, பத்தனம்திட்டா மாவட்டங்களில் சுமார் 123 பேர் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என அவர் கூறினார்.

வயநாடு, சுல்தான் பத்தேரியில் பதற்றமான சூழல்

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள மாணவர்களிடையே இரைப்பை குடல் நோய் ஏற்பட்டதாக வந்த தகவல்கள் வெளியாகியுயுள்ளன. ஷிகெல்லா தொற்று குடல் சம்மந்தமானது என்பதால் வயநாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி களில் சுகாதார முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல கேரள - கர்நாடக எல்லைப் பகுதியான சுல்தான் பத்தேரி பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 164 மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வயநாடு, சுல்தான் பத்தேரியில் பதற்ற மான சூழல் நிலவி வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.