ஒரே நாளில் 7 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலி கேரளத்தில் ஷிகெல்லா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு
19 Jun 2026, 1:23 am
<p><strong>ஒரே நாளில் 7 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலி கேரளத்தில் ஷிகெல்லா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு</strong></p><p>திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் ‘ஷிகெல்லா’ (Shig ella) எனப்படும் ஆபத் தான பாக்டீரியா தொற்று மிக அதிவேகமாகப் பரவி வருகிறது. இது குடலை பாதிக்கும் தீவிர ஆட்கொல்லி நோய் பரவல் ஆகும். கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன. அதே போல தமிழ்நாடு எல்லை மாவட்டமான இடுக்கியிலும் ஷிகெல்லா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், ஜூன் 12ஆம் தேதி அர்ஜாவ் என்ற 7 வயது சிறுவன் காய்ச்சல், டயோரியா பாதிப்பு ஏற்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் பரிசோதனை மூலம் சிறுவனுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அர்ஜாவ் பலியானார். அதே போல மலப்புரம் மாவட் டத்தில் வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவர் ஷிகெல்லா தொற்றினால் மரணம் அடைந்துள் ளார். இந்த இரண்டு மரணங்கள் குறித்து, கேரள சுகாதாரத்துறை வியாழனன்று அறிவித்தது. இதன் மூலம் கேரளத்தில் ஷிகெல்லா தொற்றுக்கு மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.</p>
