முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

30 Oct 2026, 9:16 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பினராயி விஜயன்

கோழிக்கோடு பல்கலைக்கழகத் தேர்தலில் எஸ்எப்ஐ பெற்ற வெற்றியால் ஆத்திரமடைந்தே எம்எஸ்எப் (முஸ்லிம் மாணவர் சங்கம்) அமைப்பும், அதன் அரசியல் கட்சியான முஸ்லிம் லீக்கும் வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. இந்த ஆயுதத் தாக்குதல்கள் மூலம் எஸ்எப்ஐ-யை அழித்துவிடலாம் என்பது வெறும் மாயை மட்டுமே.

சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே

ஜாமியா மிலியாவில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. அதே போல ஜாமியா விவகாரத்தில் குரல் கொடுப்பவர்களுடன் நாங்கள் உறுதியாகத் துணைநிற்கிறோம். அநீதிக்கு எதிராகப் போராடுபவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி

பீகார் தலைநகர் பாட்னா - பாஜக தேசியத் தலைவரின் (நிதின் நபின்) பகுதி ஆகும். அதே போல தர்பங்கா - ஜேடியு தலைவரின் பகுதி. ஆனால் எம்எல்சி தேர்தல் முடிவுகளில், பாட்னா, தர்பங்கா இரண்டு இடங்களிலுமே ஆர்ஜேடி வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை அன்று மோடி தூங்கியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்

வாக்குத் திருட்டுக்கு எதிராக நவ. 1 அன்று தில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெறுகிறது. கண்டிப்பாக நாங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்போம். போராட்டத்தில் பங்கேற்க உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. தேர்தல் ஆணையம் - பாஜகவும்தான் பயப்பட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram