தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரளத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு யுடிஎப் கூட்டணிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு

1 Jun 2026, 9:28 pm
கேரளத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு யுடிஎப் கூட்டணிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு

கேரளத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு யுடிஎப் கூட்டணிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஆட்சி நடை பெற்று வருகிறது. முதலமைச்ச ராக வி.டி.சதீசன் உள்ளார்.

இந்நிலையில், பள்ளி மாணவி களுக்கு மூன்று நாட்கள் வரை மாதவிடாய் விடுப்பு அளிக்கப் படும் என கேரள அரசு அறிவித்த தற்கு சொந்த மற்றும் கூட்டணிக் கட்சியினரே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

யுடிஎப் கூட்டணியின் முஸ்லிம் லீக்கின் மூத்த தலைவர் நூர்பினா ரஷீத் கூறுகையில்,“மாதவிடாய் விடுமுறையை அறிவிப்பது பெண் களின் உடல்நலப் பாதுகாப்பு மீதான அக்கறையின் ஒரு நட வடிக்கையாகக் கருதப்பட்டாலும், நடைமுறையில் அது பெண்களின் தனியுரிமையைப் பாதிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்கக்கூடும்.

பள்ளிகளிலும், கல்லூரிகளும் மாத விடாய் விடுப்பைக் கோரும்போது அல்லது பதிவு செய்யும்போது, ​​மாதவிடாய் நாட்கள் பொதுவெளி யில் தெரியவர வாய்ப்புள்ளது. இது பல குழந்தைகளுக்குத் தேவை யற்ற மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும்” என அவர் கண்டனம் தெரி வித்தார்.

அதே போல திருக்காக்கரா சட்ட மன்ற உறுப்பினர் உமா தாமஸ் (காங்கிரஸ்) கூறுகையில், “மாதவிடாய் என்பது ஒரு தெய்வீக நிகழ்வு.

அதை அலட்சியம் செய்யக் கூடாது. மாதவிடாய் விடுப்பு வழங் கப்படும்போது, ​​பதின்வயதின ரிடையே கேலியும் வசவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது” என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதே போல பாஜகவின் ஆர். ஸ்ரீலேகா,”மாதவிடாய் விடுப்பு அனுமதிப்பது அவமானகரமா னது.

மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட பெருமை. ஒவ்வொரு மாதமும் அவள் வகுப்பு க்குச் செல்லவில்லை. உள்ளூர் மக்களுக்குத் தெரிந்துவிடும். இது அவமானகரமானது” என அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.