பூனை அல்ல; பொன்னான வருவாய்!
yesterday
<p><strong>பூனை அல்ல; பொன்னான வருவாய்! </strong></p><p>கேரளாவில் எல்.டி.எப். ஆட்சியில் கஜானா காலியாகிவிட்டது என்றும், கஜானாவில் பூனை தூங்குகிறது என்றும் யு.டி.எப். கூட்டணியினர் தேர்தல் பிரச்சாரத்திலும், தங்களின் வெள்ளை அறிக்கையிலும் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால், இடதுசாரி அரசைப் பொதுவாக விமர்சிக்கும் ‘மலையாள மனோரமா’ நாளிதழ் தற்போது வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காங்கிரசின் முகத்திரையைக் கிழித்துள்ளன. நடப்பு ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் கேரளாவின் வருவாய் ரூ.5,629 கோடி அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.16,667 கோடியாக இருந்த வருவாய், இந்த ஆண்டு ரூ.22,296 கோடியாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய முன்னாள் நிதி அமைச்சர் கே.என். பாலகோபால், “மலையாள மனோரமாவின் இந்த மதிப்பீட்டை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் அங்கீகரிப்பாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கோவிட், நிபா தொற்றுகள் மற்றும் இயற்கை பேரிடர்களைச் சந்தித்த போதிலும், கேரளா வருவாயைப் பெருக்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகாலப் பொருளாதார முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளத்தை எல்.டி.எப். அரசு அமைத்துள்ளது தெளிவாகியுள்ளது.</p>
