தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்திய மாணவர் சங்கத்தினர் மீது கேரள காவல்துறை கொடூரத் தாக்குதல்

2 Sept 2026, 8:44 pm
இந்திய மாணவர் சங்கத்தினர் மீது  கேரள காவல்துறை கொடூரத் தாக்குதல்

இந்திய மாணவர் சங்கத்தினர் மீது கேரள காவல்துறை கொடூரத் தாக்குதல்

திருவனந்தபுரம்தேசிய விளையாட்டு தின விழாவின் போது ‘வந்தே மாதரம்’ பாடல் சர்ச்சைக்குரிய வரிகளுடன் பாடப்பட்டது. இதனைக் கண்டித்து கேரளப் பல்கலைக்கழக வளாகத்தை நோக்கி இந்தியமாணவர்கள் சங்கம் (SFI) செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தினர். இந்த பேரணி மீது கேரளக் காவல்துறை வன்முறைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பல தோழர்கள் படுகாயமடைந்தனர்.உயர்கல்வித் துறை அமைச்சர் ரோஜி எம்.ஜான் முன்னிலையில் கேரளப் பல்கலைக்கழகத்தில் வந்தே மாதரம் பாடல் சர்ச்சைக்குரிய வரிகளுடன் பாடப்பட்டது. இதற்கு எதிராகவும், கேரளப்பல்கலைக்கழகங்கள் காவிமயம் ஆக்கப்படுவதை கண்டித்தும், மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தற்காலிகத் துணைவேந்தர்களை ஆளுநர் தன்னிச்சையாக நியமிப்பது, ஆளுநருக்கும் காங்கிரஸ் தலைமையிலான கேரள அரசுக்கும்இடையே உள்ள உடன்பாட்டைக் கண்டித்தும்இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்ட பேரணி கேரளப் பல்கலைக்கழக வாயிலை அடைந்ததும், மாணவர்களைக் கலைக்கக் காவல்துறை தண்ணீர் பீரங்கிகளில் நீரைப் பாய்ச்சி அடித்தனர். பின்னர் லத்தியால் தாக்கினர்.

இத்தாக்குதலில் மாணவர் சங்க மாநிலச் செயற்குழு உறுப்பினரும் கோட்டயம் மாவட்டத் தலைவருமான வைஷ்ணவி ஷாஜி அவர்களது கண்ணின் கீழ் இமையில் பலத்த காயம் ஏற்பட்டது. மத்தியக் குழு உறுப்பினர் ஆர்யா பிரசாத் தலையில் லத்தியால்அடிபட்டதில் மயக்கமடைந்தார். திருவனந்தபுரம் மாவட்டக் குழு உறுப்பினர் வைஷ்ணா அவர்களது முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தோழர்கள் மீது ஆண் காவலர்கள் தாக்குதல் நடத்தினர். நிலைமை மோசமடைந்த பிறகே பெண் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும்இந்திய மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதும் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். மேலும், மாணவர்கள் மீது எப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படும் என்றும், எதிர்காலத்தில் அரசு வேலைகளை எப்படிப் பெறுவீர்கள் என்று பார்க்கலாம் எனவும் காவல் அதிகாரிகள் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தில் கேரள மாநிலச் செயலாளர் பி. எஸ்.சஞ்சீவ், கூறியதாவது, மதச்சார்பின்மையைப் பாதுகாக்கத் தேவைப்பட்டால் இந்திய மாணவர் சங்கம் தெருவில்இறங்கிப் போராடும். தடியடி நடத்துவதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை.பாஜகட்சி தலைமையிலான ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப் அரசு தலைவணங்குகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.