கேரளத்தில் மருந்துகள், மருத்துவர்கள், அதிகாரிகளும் இல்லை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கடும் குற்றச்சாட்டு!
25 Jun 2026, 9:16 pm

கேரளத்தில் மருந்துகள், மருத்துவர்கள், அதிகாரிகளும் இல்லை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கடும் குற்றச்சாட்டு!

திருவனந்தபுரம் கேரளத்தில் பல்வேறு தொற்று நோய்கள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அடிமட்ட அளவில் தடுப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதில் தற் போதைய யுடிஎப் அரசு முற்றிலும் தோல்விய டைந்துள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சட்டமன்றத்தில் கொண்டு வந்த அவசரத் தீர்மானத்தின் மீது பேசுகையில்,“மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்து கள் கூடக் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. கேரள பொதுச் சேவை ஆணையத்தின் மூலம் தகுதி பெற்று, பணி நியமனப் பரிந்துரை உத்தர வைப் பெற்ற மருத்துவர்களுக்கு இன்னமும் அதிகாரப்பூர்வ நியமன ஆணைகள் வழங்கப் படவில்லை. மிக முக்கியமாக, மாநிலத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மாவட்ட மருத்துவ அலு வலர்கள் இல்லாத அவலநிலை நீடிக்கிறது. இந்த நிர்வாக முடக்கத்தின் பின்னணியில் உள்ள அரசின் சுய விருப்பம் அல்லது உள்நோக்கம் என்ன என்பதை முதலமைச்சர் சதீசன் தலைமை யிலான அரசு உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.

நிபா தடுப்புப் பணிகளில் அலட்சியம் கோழிக்கோட்டில் உயிர்க்கொல்லியான ‘நிபா’ வைரஸ் நோய் கண்டறியப்பட்ட பிறகு, அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் தற்போதைய அரசு பெரும் தாமதம் செய்துள்ளது. நிபா என்பது மிகவும் கொடிய நோய். இத்தகைய அசாதாரண சூழலில் மற்ற அனைத்துப் பணிகளையும் ஒதுக்கிவிட்டு, களத்தில் நின்று ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னின்று வழிநடத்தியிருக்க வேண்டியவர் சுகாதார அமைச்சர்தான். ஆனால், தற்போ தைய அமைச்சர் நோய் கண்டறியப்பட்டு சில நாட்கள் கழித்துத்தான் கோழிக்கோடு பகு திக்குச் சென்றடைந்தார்.

கடந்த காலங்களில் எப்போதெல்லாம் நிபா பாதிப்பு ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் அப்போதைய இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசின் சுகாதார அமைச்சர் உடனடி யாக பாதிக்கப்பட்டப் பகுதிக்கு நேரடியாகச் சென்று அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்தார். நாடு முழுவதும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஒட்டுமொத்த மக்களை யும் ஈடுபடுத்தி முந்தைய அரசு போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பருவமழைக்கு முன்பு செய்ய வேண்டிய துப்புரவு மற்றும் தடுப்புப் பணிகளை முந்தைய எல்டிஎப் அரசு செய்யவில்லை என தற்போ தைய சுகாதாரத்துறை அமைச்சர் முரளிதரன் குற்றம்சாட்டுகிறார். ஆனால் அந்தக் கால கட்டத்தில் பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், துறை ரீதியான அதிகாரி களை அழைத்து கூட்டங்களை நடத்த முடிய வில்லை. இருப்பினும், எல்டிஎப் அரசு பிப்ரவரி மாதத்திலேயே உரிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, செய்ய வேண்டிய ஏற்பாடுகளைச் சரியாகச் செய்திருந்தது.

ஆனால், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, நோய்த் தடுப்பு தொடர்பாக எந்தவொரு முறை யான கூட்டங்களும் நடத்தப்படவில்லை. சுகாதா ரத் துறைக்கும் உள்ளாட்சித் துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை.

இதுபோன்ற பேரிடர் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகள் கட்சிப் பாகுபா டின்றி அரசுடன் திறம்பட ஒத்துழைத்து பணி யாற்றியதுதான் எல்டிஎப் அரசின் அனுபவம் ஆகும்.

தற்போதைய ஆட்சியில், அமைச்சர் ஒரு கருத்தைக் கூற, அதிகாரிகள் வேறொரு கருத்தைக் கூறுகின்றனர். சுகாதாரத் துறை மிகத் தீவிரமாகச் செயல்பட வேண்டிய இந்த இக் கட்டான நேரத்தில், அதிகாரிகள் பரவலாக இட மாற்றம் செய்யப்படுகிறார்கள். கேரள வரலாற்றி லேயே இதுவரை கண்டிராத வகையில், சுகாதா ரத் துறையின் தலைமைப் பதவிகளிலேயே பெரும் அதிகார இழுபறி (பதவிச் சண்டை) நடந்து கொண்டிருக்கிறது.

அரசு உடனடியாகத் தனது அதிகாரிகளை நம்பிக்கைக்குள் கொண்டுவர வேண்டும். சுகாதாரப் பணியாளர்களின் மன உறுதியைக் குலைக்கும் வகையிலான பெருமளவிலான அரசியல் பழிவாங்கல் இடமாற்றங்களைத் தவிர்க்க வேண்டும்” என கேரள எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.