நிபா விவகாரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்த மாட்டோம்; எதிர்க்கட்சியாக முழு ஒத்துழைப்பு அளிப்போம் கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் உறுதி
14 Jun 2026, 9:25 pm

நிபா விவகாரத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்த மாட்டோம்; எதிர்க்கட்சியாக முழு ஒத்துழைப்பு அளிப்போம்

கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் உறுதி

திருவனந்தபுரம் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இதனால் கோழிக்கோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.

கேரள எல்லையில் உள்ள மாவட் டங்களில் தமிழ்நாடு அரசு பாது காப்பை பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிபா வைரஸ் பரவலை தடுப்பதில் மாநில அரசு போதிய ஒருங்கிணைப்பு இல்லா மல் செயல்படுவதாக கேரள எதிர்க் கட்சித் தலைவர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் ஞாயி றன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மேலும் பேசுகையில்,”நிபா வைரஸ் பரவ லைத் தடுக்கவும், தேவையான சிகிச்சைகள், மருந்துகள் தடை யின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வும் மாநில அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த இக்கட்டான சூழலில் தலைமை தாங்கி வழிநடத்த வேண்டிய சுகா தார அமைச்சரும், சுகாதாரத் துறை யும், மாவட்ட நிர்வாகத்துடன் சரி யாக ஒருங்கிணைந்து செயல்பட வில்லை. இவர்களின் பொதுத் துறை அறிக்கைகளைப் பார்க்கும் போதே இந்த முரண்பாடு தெளி வாகத் தெரிகிறது.

விழிப்புணர்வு கூட இல்லை இதற்கு முன்பு இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) ஆட்சிக் காலத்தில் நிபா பாதிப்பு ஏற்பட்ட போது, சுகாதார அமைச்சர்கள் நேர டியாக அந்தப் பகுதிகளிலேயே முகா மிட்டு தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தனர்.

ஆனால், துர திர்ஷ்டவசமாக இப்போது அத்த கைய விழிப்புணர்வோ அல்லது ஒருங்கிணைப்போ அரசிடம் காணப் படவில்லை. வைரஸ் பரவலைக் கட்டுப் படுத்துவதிலும், பாதிக்கப்பட்ட வர்களுடன் தொடர்பில் இருந்த வர்களைக் கண்டறிவதிலும் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பைப் பயன்படுத்தாமல், அவர்கள் நிபா கட்டுப்பாட்டு அறையிலிருந்து தள்ளி வைக்கப்படுகின்றனர்.

மிக முக்கியமாக இந்த சுகாதார அவ சர நிலை நேரத்தில் சுகாதார சேவை கள் இயக்குநர் கே.ஜே.ரீனா இட மாற்றம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நிபா வைரஸ் மட்டுமின்றி, கேர ளத்தில் தற்போது பரவி வரும் ஷிகெல்லா, மேற்கு நைல் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகிய வற்றின் பரவலும் கவலையளிப்ப தாக உள்ளது.

முந்தைய எல்டிஎப் ஆட்சியில் நோய்த்தொற்று ஏற்பட்ட போது சாப வார்த்தைகளை கொட் டிய தற்போதைய சுகாதார அமைச் சர் (முரளீதரன்), இப்போது அதி காரிகளின் மீது பழியைப் போட்டு விட்டு தன் பொறுப்பிலிருந்து தப் பிக்கப் பார்க்கிறார்.

எந்தவொரு வைரஸ் பரவலும் ஆட்சியில் இருக்கும் அரசைப் பொறுத்து வருவதில்லை என்ற ஞானத்தை கடந்த ஒரு மாதத்தில் அவர் பெற்றிருப்பார் என்று நம்பு கிறேன்.

காங்கிரஸ் தலைமையி லான யுடிஎப் எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்ததைப்போல, இந்த நிபா விவகாரத்தை நாங்கள் ஒரு அரசியல் கருவியாகப் பயன் படுத்த மாட்டோம். வைரஸை ஒழிக்க எதிர்க்கட்சி முழு ஒத்து ழைப்பு அளிக்கும்” என்று பினராயி விஜயன் உறுதியளித்தார்.