தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல் “அரசியல் கடந்து ஒன்றிணைவோம்” முன்னாள் அமைச்சர் வீணா ஜார்ஜ் அழைப்பு!

12 Jun 2026, 8:27 pm
கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல் “அரசியல் கடந்து ஒன்றிணைவோம்”   முன்னாள் அமைச்சர் வீணா ஜார்ஜ் அழைப்பு!

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல் “அரசியல் கடந்து ஒன்றிணைவோம்” முன்னாள் அமைச்சர் வீணா ஜார்ஜ் அழைப்பு!

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் ஆட்கொல்லி வைரஸான ‘நிபா’ வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இதனால் கோழிக் கோடு கட்டுப்பாடு உள்ள பகுதி யாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முந்தைய கால அனுபவங்களைக் கொண்டு அறி வியல் பூர்வமாக இந்நோயை எதிர் கொள்ள வேண்டும் என்றும், மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறு வதை விட உயிர்களைக் காப்பதே முக்கியம் என்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய சுகா தாரத்துறை அமைச்சராக இருக்கும் கே.முரளிதரன், கடந்த அரசாங்கத் தின் போது (வீணா ஜார்ஜ் அமைச்ச ராக இருந்தபோது) நிபா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆற்றிய விமர்சன உரைகளைச் சுட்டிக்காட்டி பலரும் தனக்கு செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

இதைப் பற்றி நான் இங்கு எதுவும் எழுதப் போவதில்லை. காலம் உண்மை யை நிரூபிக்கட்டும். நோய்களின் நெருக்கடிகள் மற்றும் சவால்களில் மக்களை அரவணைத்து, சிறந்த அறிவியல் ரீதியான பாதுகாப்பை வழங்குவது அவசியமாகும். அதற்காக ஒன்றுபட்டு நிற்பதே இடதுசாரிகளின் அணுகுமுறை யாகும். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆர்டிபி சிஆர் (RTPCR) பரிசோதனையில் நிபா நோய் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிப்பதுடன், நோய் பரவாமல் தடுக்கவும், நோய்த்தடுப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும். புனே தேசிய நச்சுயிரி நிறுவனம் (NIV) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே, மாநில ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் அவசர தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

கேரள மாநிலம் ஏற்கெனவே நிபா வைரஸை பலமுறை கையாண்டு ள்ளதால், அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறிவியல் பூர்வமான சிகிச்சை நெறிமுறை களும் தடுப்பு வழிகாட்டுதல்களும் உள்ளன. அவற்றை உடனடியாகப் பின்பற்ற வேண்டும். பாதிக்கப் பட்ட நபருடன் தொடர்பில் இருந்த வர்களைக் கண்டறிந்து தனிமைப் படுத்துவது மற்றும் பரவலைத் தடுப்பது மிக முக்கியம்” என வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.