முந்தய பக்கம்

உலகிற்கே வழிகாட்டும் ‘கேரளா மாடல்’!

8 Apr 2026, 5:30 am
உலகிற்கே வழிகாட்டும் ‘கேரளா மாடல்’!

உலகிற்கே வழிகாட்டும் ‘கேரளா மாடல்’!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, மனித வள மேம்பாட்டிலும் வறுமை ஒழிப்பிலும் படைத்துள்ள சாதனைகள் இன்று உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

2025-ஆம் ஆண்டில் ‘தீவிர வறுமை ஒழித்த மாநிலமாக’ கேரளா தன்னை அறிவித்துக் கொண்டது. கேரளாவின் உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவின் உற்பத்தியில் வெறும் 0.56% தான். ஆனால், மனித மேம்பாட்டுக் குறியீட்டில் (HDI) அமெரிக்காவையே கேரளா முந்தியுள்ளது.

கல்வித்துறையில் கேரளா செய்துள்ள முதலீடு சுமார் ரூ. 5000 கோடி. 50,000 பள்ளிக் வகுப்பறைகள் ‘ஹை-டெக்’ வசதி பெற்றுள்ளன. இந்தியாவில் முதன்முதலாக அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியைப் புகுத்திய பெருமை கேரளா அரசுையேச் சாரும்.

விவசாயிகளுக்குத் துணையாகவும் பாதுகாப்பு அளிப்பதில் கேரளா முன்னோடி. காய்கறிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை (MSP) நிர்ணயித்த இந்தியாவின் முதல் மாநிலம் கேரளா தான். 46 லட்சம் பெண்களை உள்ளடக்கிய ‘குடும்பஸ்ரீ’ இயக்கம் இன்று பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram