தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.1,158 கோடி கல்வி நிதி பெற உரிமை உண்டு ஒன்றிய அரசுக்கு கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதம்

25 Nov 2025, 3:29 pm
ரூ.1,158 கோடி கல்வி நிதி பெற உரிமை உண்டு ஒன்றிய அரசுக்கு கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதம்
<p><strong>ரூ.1,158 கோடி கல்வி நிதி பெற உரிமை உண்டு ஒன்றிய அரசுக்கு கேரள அமைச்சர் வி.சிவன்குட்டி கடிதம்</strong></p> <p>கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் &nbsp;சமக்ர சிக்சா நிதியை கேரளா விற்கு உடனடியாக ஒதுக்குமாறு &nbsp;அமைச்சர் வி.சிவன்குட்டி ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். ரூ.1158 கோடி &nbsp;கல்வி நிதி பெற கேரளத்திற்கு உரிமை &nbsp;உண்டு என்பதை ஒன்றிய அரசுக்கு சுட்டிக்காட்டி, கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் வி.சிவன் குட்டி செய்தியாளர்களிடம் மேலும் கூறு கையில்,&rdquo;கடந்த இரண்டரை ஆண்டு களாக சமக்ர சிக்சாவிற்கு ஒன்றிய அரசு &nbsp;நிதி ஒதுக்கவில்லை. நீண்ட இடை வெளிக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் நிதி கிடைத்தது. 2025-26ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.456 கோடியில், முதல் தவணையாக ரூ.92.41 கோடி ஒன்றிய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. &nbsp;கல்வி உரிமைச் சட்டத்தின் நிதி &nbsp;மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக் &nbsp;கான நிதியை உடனடியாக ஒதுக்க ஒன் &nbsp;றிய அரசுக்கு ஒரு திட்டம் சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டு முதல் &nbsp;கேரளா ரூ.440.87 கோடியைப் பெற உரிமை உள்ளது. 2025-26 உட்பட 2023-24 &nbsp;ஆம் ஆண்டின் மூன்றாவது தவணையிலி ருந்து மொத்தம் ரூ.1,158 கோடியை ஒன் &nbsp;றிய அரசிடமிருந்து மாநிலம் பெற &nbsp;வேண்டி உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாகப் பெறப்பட்ட &nbsp;நிதி குழந்தைகளின் அடிப்படைத் &nbsp;தேவைகளுக்குப் பயன்படுத்தப்படு கிறது. இலவச சீருடைகள், பாடப்புத்த கங்கள், பட்டியல் சாதிகள் மற்றும் பட்டி யல் பழங்குடியினரைச் சேர்ந்த குழந்தை களுக்கான விடுதிச் செலவுகள், இந்தப் &nbsp;பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளுக் கான பயணச் சலுகைகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லாத &nbsp;குழந்தைகளுக்கு பயிற்சி, பெண் குழந் தைகளுக்கான விடுதிச் செலவுகள் மற்றும் பள்ளி பராமரிப்பு ஆகியவற்றின் ஒன்றிய அரசின் பங்கினைப் பெற மாநி லத்திற்கு உரிமை உண்டு. &nbsp;இரண்டரை ஆண்டுகளாக சமக்ர சிக்சா கல்வியின் ஒரு பகுதியாக ஆட்டிசம் &nbsp;மையத்தின் செயல்பாடுகள் மற்றும் ஊழி யர்களின் சம்பளத்திற்கு மாநில அரசு நிதி வழங்கி வருகிறது. சமக்ர சிக்சா கல்வி யின் ஒரு பகுதியாக மாநிலத்தில் 169 &nbsp;ஆட்டிசம் மையங்கள் இயங்கி வரு கின்றன. சராசரியாக, ஒவ்வொரு மையத் &nbsp;திலும் 60 குழந்தைகளுக்கு சேவை செய் &nbsp;யப்படுகிறது. பேச்சு சிகிச்சை மற்றும் பிசி யோதெரபி போன்ற வசதிகள் இங்கு &nbsp;இலவசம். சிறப்புப் பயிற்சி பெற்ற சிறப்பு &nbsp;கல்வியாளர்கள் மற்றும் ஆயாக்கள் இங்கு சேவை செய்கிறார்கள். தற்போது &nbsp;எஸ்எஸ்கே-வில் ஆசிரியர்கள் உட்பட 6,870 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார் &nbsp;கள்&rdquo; என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.