இலவச பேருந்து வசதியைப் பெற பெண்கள் ஏழைகளைப் போல நடிக்கிறார்களாம்!
yesterday

இலவச பேருந்து வசதியைப் பெற பெண்கள் ஏழைகளைப் போல நடிக்கிறார்களாம்!

கேரள அமைச்சர் அடாவடிப் பேச்சு

கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக வி.டி.சதீஷன் உள்ளார்.

இந்நிலையில், பாலக்காட்டில் திங்களன்று நடைபெற்ற கேரள பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் அம்மாநில போக்குவரத்துஅமைச்சர் சி.பி.ஜான்,”பிரியதர்ஷினி திட்டத்தின் கீழ், கேரள மாநில சாலைப்போக்குவரத்துக் கழகத்தின் சாதாரண பேருந்துகளில் இலவசப் பயணம் செய்வதற்காக, மாநிலத்தில் உள்ளபெண்களில் பெரும்பகுதியினர் “ஏழைகளைப் போல நடிக்கிறார்கள்”. பெண்கள்கேரள அரசுப் பேருந்துகளில் நெரிசல் ஆகும் அளவிற்கு அதிகமாக ஏற காரணம், அவர்களால் பயணக் கட்டணத்தை செலுத்த முடியாத சூழல் இருப்பதாக காண்பித்துக் கொள்கின்றனர்.

அதே நேரத்தில் அவர்கள் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.இலவச பேருந்து சேவையை பயன்படுத்திவிட்டு, சிறிய கட்டணம் அல்லது கட்டணமே இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளை பல பெற்றோர்கள்தவிர்ப்பதால், அரசுப் பள்ளிகளில் இடங்கள் காலியாகவே கிடக்கின்றன” என சர்ச்சைக்கு உரிய வகையில்பேசினார்.

அமைச்சர் ஜானின் இந்த அடாவடி பேச்சுக்கு எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.