தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரள உள்ளாட்சித் தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை

12 Dec 2025, 2:40 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை
<p><strong>கேரள உள்ளாட்சித் தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை</strong></p> <p>கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக டிசம்பர் 9 அன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 70.91% வாக்குகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து டிச., 11 அன்று நடைபெற்ற 2ஆவது கட்ட தேர்தல் திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, வயநாடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்றது. 2ஆம் கட்டத்தில் 76.08% வாக்குகள் பதிவாகின. &nbsp;இந்நிலையில், பதிவான வாக்குகள் சனியன்று எண்ணப்படுகின்றன. காலை 7 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், மாலைக்குள் இறுதி முடிவு தெரியவரும் என செய்திகள் வெளியாகியுள்ளன. &nbsp;வடக்கு கேரளாவிலும் வாக்குப்பதிவு குறைந்தது கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்டத்திலும் வாக்குப்பதிவு குறைந்தது. வியாழனன்று (டிச.11) வாக்குப்பதிவு நடைபெற்ற திருச்சூர் முதல் காசர்கோடு வரையிலான மாவட்டங்களில் 76.08% வாக்கு பதிவாகியுள்ளது. 2020இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்த மாவட்டங்களில் சராசரி வாக்குப்பதிவு 77.9% ஆக இருந்தது. மாவட்டங்களும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சதவீதமும் (2020 வாக்குப்பதிவு அடைப்புக்குறிக்குள்): திருச்சூர் &ndash; 72.46 (75.20), பாலக்காடு &ndash; 76.27 (78.13), மலப்புரம் &ndash; 77.43 (78.91), &nbsp;கோழிக்கோடு &ndash; 77.26 (79.20), வயநாடு &ndash; 78.3 (79.47), கண்ணூர் &ndash; 76.77 (77.13), காசர்கோடு &ndash; 74.86 (77.25) மாநகராட்சி (2020 வாக்குப்பதிவு அடைப்புக்குறிக்குள்) : திருச்சூர் &ndash; 62.45 (71.88), கோழிக் கோடு &ndash; 69.55 (74.70), கண்ணூர் &ndash; 70.33 &nbsp;(74.75) முதல் கட்ட வாக்குப்பதிவு : உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 70.91% ஆகும். திரு வனந்தபுரம் முதல் எர்ணாகுளம் வரை யிலான 7 மாவட்டங்களில் 94,10,450 பேர் &nbsp;தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி னர். 2020ஆம் ஆண்டில், இந்த7 மாவட்டங்களிலும் சராசரி வாக்குப்பதிவு 73.82% ஆக இருந்தது. இந்த முறை, &nbsp;7 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதிகபட்ச வாக்குப் பதிவு எர்ணாகுளம் மாவட்டத்தில், 74.57% ஆக இருந்தது. குறைந்தபட்ச வாக்குப்பதிவு பத்தனம்திட்டாவில் 66.78 % ஆக இருந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.