தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரள உள்ளாட்சித் தேர்தல் யுடிஎப் வசமிருந்த வார்டுகளை எல்டிஎப் கைப்பற்றி முன்னேற்றம்!

29 Sept 2026, 9:57 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல் யுடிஎப் வசமிருந்த வார்டுகளை எல்டிஎப் கைப்பற்றி முன்னேற்றம்!

கேரள உள்ளாட்சித் தேர்தல் யுடிஎப் வசமிருந்த வார்டுகளை எல்டிஎப் கைப்பற்றி முன்னேற்றம்!

பாஜக “0”திருவனந்தபுரம், செப். 29 -கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக வி.டி.சதீசன் உள்ளார்.இந்நிலையில், கேரளத்தில் காலியாக இருந்த 12 மாவட்டங்களின் 38 உள்ளாட்சி வார்டுகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல்எண்ணப்பட்டன. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்), 2 ஆதரவு சுயேச்சைகள் உட்படமொத்தம் 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1 ஆதரவு சுயேச்சை உட்பட யுடிஎப் 19 இடங்களை கைப்பற்றினாலும், கடந்தமுறை வென்ற 3 வார்டுகளை, எல்டிஎப் வசம் பறி கொடுத்துள்ளது. வெற்றிபெற்ற வார்டுகளிலும், மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தையே யுடிஎப் பெற்றுள்ளது.

வாக்கு சதவிகிதம்இடது ஜனநாயக முன்னணி, 85 ஆயிரத்து 103 வாக்குகளுடன், பதிவான மொத்த வாக்குகளில் 46.80 சதவிகிதத்தைப் பெற்றுள்ளது. அதேநேரம் ஐக்கிய ஜனநாயக முன்னணி73 ஆயிரத்து 637 வாக்குகளுடன், பதிவான மொத்த வாக்குகளில் 40.49 சதவிகிதத்தையே பெற்றுள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலோடு கேரளத்தில் இடதுசாரிகளின் அரசியலுக்கு முடிவு கட்டுவோம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கொக்கரித்த நிலையில், இடது ஜனநாயகமுன்னணியிடம் 3 வார்டுகளை இழந்து, யுடிஎப் அடி வாங்கியுள்ளது. எல்டிஎப் தனது மக்கள் செல்வாக்கைமீண்டும் நிரூபித்துள்ளது.

பாஜக ‘பூஜ்ஜியம்’‘டி-20’ கட்சி உட்பட சுயேச்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், பாஜக ஓரிடத்தில் கூடவெற்றிபெறவில்லை. பாஜக பலமாக உள்ள பகுதிகள் எனக் கூறிக்கொள்ளும் திருவனந்தபுரம், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அக்கட்சியால் வெற்றிபெறமுடியவில்லை. மாறாக, ‘டி-20’ கட்சி பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருப்பதால், நாங்கள் இடைத்தேர்தலில் ஒரு இடத்தை வென்றுவிட்டோம் என்று பாஜக சமாளித்து வருகிறது. என்டிஏ 22 ஆயிரத்து 114 வாக்குகளுடன் 12.16 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.