முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி கேரளத்தில் தொடக்கம்
30 Mar 2026, 3:40 pm
<p><strong>முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி கேரளத்தில் தொடக்கம்</strong></p>
<p>கேரளத்தில் 85 வயதுக்கு மேற் பட்டவர்கள் மற்றும் 40 சதவிகிதத்திற்கும் அதிக குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி களுக்கு ‘வீட்டிலிருந்தே வாக்க ளிக்கும்’ வசதி தொடங்கியுள்ளது. முதியவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிப்பதற்கான இந்த வசதி ஏப்ரல் 4 வரை வழங்கப்படும். வாக்குச் சாவடி அலுவலர்கள் (BLO) மூலம் முன்கூட்டியே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்கள் இவ்வாறு வாக்களிக்கலாம். நடமாடும் வாக்குப் பதிவுக் குழுவினர் இப்பணியை மேற் கொண்டுள்ளனர். ஒரு வாக்குப்பதிவு அலுவலர், இரண்டு உதவியாளர்கள், நுண் கண்காணிப்பாளர்கள், ஒளிப்பதி வாளர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழு வீட்டிற்கு வரும். கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர் களும் உடன் இருக்க வேண்டும். வாக்குப்பதிவுக் குழு வீட்டிற்கு வரும் தேதி மற்றும் நேரம் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். முதல் முறை வாக்காளர்கள் வர வில்லை என்றால், இரண்டாவது முறைக்கான தேதி மற்றும் நேரம் நிர்ணயிக்கப்படும். தொகுதி வாரி யாக வீட்டிலிருந்து வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் பட்டியல் அர சியல் கட்சிகளுக்கும் வேட்பாளர் களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.</p>
