தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிவேக ரயில் திட்டத்திற்கு தயாராகிறது கேரளம்

15 Feb 2026, 3:03 pm
அதிவேக ரயில் திட்டத்திற்கு தயாராகிறது கேரளம்
<p><strong>அதிவேக ரயில் திட்டத்திற்கு தயாராகிறது கேரளம்</strong></p> <p>கேரளாவின் பயணப் பிரச்சனை களுக்கு நிரந்தரத் தீர்வு காண &nbsp;முன்மொழியப்பட்ட அதிவேக பிராந்திய விரைவு போக்கு வரத்து (ஆர்ஆர்டிசி) அமைப்புக்கு ஒன்றிய அரசின் ஆதரவைக் கோரி அம் &nbsp;மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் &nbsp;கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பான கடிதத்தில்,&rdquo;கேரள மாநிலத்தில் ரயில் போக்குவரத்தை வேக மாகவும் எளிதாகவும் மாற்ற அதிவேக ரயில் திட்டம் அவசியம். இதுபோன்ற புதுமையான போக்குவரத்து அமைப்பு மாநிலத்தில் தற்போதுள்ள ரயில் பாதை களில் உள்ள நெரிசல் மற்றும் மந்த &nbsp;நிலையைத் தீர்க்க முடியும். சில்வர் லைன் &nbsp;திட்டம் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில், அதிவேக பயணத்திற்கான மாற்று வழிகளைக் கருத்தில் கொண்டு, ஆர்ஆர்டிசி திட்டத்திற்கு ஒப்புதல் மற் றும் நிதி உதவி அளிக்க வேண்டும். மாநி லத்தின் வடக்கு முனையான காசர் கோட்டை &nbsp;தெற்கு முனையான திருவனந்த &nbsp;புரத்துடன் அதிவேகத்தில் இணைப்பது &nbsp;பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்று லாத் துறைக்கு பெரிய ஊக்கத்தை அளிக் &nbsp;கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் &nbsp;பணிகள் நிறைவடைந்தவுடன் போக்கு வரத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப &nbsp;ரயில்வே துறையில் புரட்சிகரமான மாற் &nbsp;றத்தை ஏற்படுத்துவதே அரசின் நோக் &nbsp;கம். இந்த விசயத்தில் ஒன்றிய ரயில்வே &nbsp;அமைச்சகம் நேர்மறையான நிலைப் பாட்டை எடுக்கும் என்று கேரளா நம்பு கிறது&rdquo; என்று பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். முசாபர்நகர் மோடியை விமர்சித்ததற்காக இளைஞரை கைது செய்த உ.பி. பாஜக அரசு உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக கோராக்பூர் மடத்தின் சாமியார் உள்ளார். இந்நிலையில், முசாபர்நகரில் பிர தமர் மோடி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டதாக 22 வயது இளைஞர் ஒரு வரை உத்தரப்பிரதேச காவல்துரை ஞாயி றன்று கைது செய்துள்ளது. இதுதொடர் &nbsp;பாக சார்தாவால் காவல் நிலைய அதிகாரி &nbsp;சத்யநாராயண் தஹியா,&rdquo;கைது செய்யப் &nbsp;பட்டவர் ஜிதேந்திர குமார் காஷ்யப் என &nbsp;அடையாளம் காணப்பட்டுள்ளார். காஷ்யப் மீது பிஎன்எஸ் &nbsp;கீழ் 352 &nbsp;(அமைதியை சீர்குலைக்கும் நோக்கில்), &nbsp;353 (பொதுமக்களிடையே குழப்பத்தை &nbsp;ஏற்படுத்தும் வகையில்) உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள் ளது&rdquo; என அவர் கூறினார். &nbsp;தற்போது கைது செய்யப்பட்ட காஷ்யப் மற்றும் அவரது குடும்பத்தினர் விசாரணை வளையத்தில் வைக்கப்பட் &nbsp;டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. காஷ்யப் பிரதமர் மோடியை எந்த வகையில் விமர்சித்தார் என்பது &nbsp;தொடர்பாக செய்திகள் வெளியாக வில்லை என்றாலும், இந்த சம்பவத்திற்கு &nbsp;நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து &nbsp;வருகின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.