தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊரக வேலை உறுதித் திட்டம் மீட்டெடுக்கப்பட வேண்டும் மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதத்தில் கேரளா வலியுறுத்தல்

11 Jan 2026, 2:59 pm
ஊரக வேலை உறுதித் திட்டம் மீட்டெடுக்கப்பட வேண்டும் மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதத்தில் கேரளா வலியுறுத்தல்
<p><strong>ஊரக வேலை உறுதித் திட்டம் மீட்டெடுக்கப்பட வேண்டும் மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதத்தில் கேரளா வலியுறுத்தல்</strong></p> <p>புதுதில்லி, ஜன.11- மகாத்மா காந்தி தேசிய ஊரக &nbsp;வேலை உறுதி சட்டத்தை (MNREGA) குறைமதிப்பிற்கு உட்படுத்தும் புதிய வி பி - ஜி ராம் ஜி (VB-GRAMG) சட்டத்தை திரும்பப் பெறவும், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மீட்டெடுக்கவும் மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய விவாதத்தில் கேரளம் வலியுறுத்தியுள்ளது. ஒன்றிய பட்ஜெட்டுக்கு முன்ன தாக நடந்த மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கேரள நிதி அமைச்சர் கே.என். பாலகோபால் இந்தக் கோரி க்கையை முன்வைத்தார். &nbsp;புதிய சட்டத்தின்படி, திட்டச் செலவில் 40 சதவிகிதத்தை மாநிலங்கள் ஏற்க வேண்டும். &nbsp;இது கேரளா போன்ற மாநிலங் களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கூடுதல் பொறுப்பை உரு வாக்கும் என அவர் சுட்டிக்காட்டி னார். &nbsp;ஒன்றிய நிதியுதவிபெறும் பிற &nbsp;திட்டங்களின் மத்திய பங்கை தற்போதைய 60 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பாலகோபால் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்: மேலும் அவர் கூறியதாவது: 1. கடன் வரம்பில் ரூ. 17,000 கோடி பற்றாக்குறை மற்றும் மாநில த்தின் உள்நாட்டு உற்பத்தியைக் கணக்கிடும் முறையில் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட ரூ.4,250 கோடி இழப்பை ஈடுகட்ட ரூ. 21,000 கோடி சிறப்பு பொருளாதார திருத்த தொகுப்பு. 2. கேரளாவிற்கான எய்ம்ஸ், &nbsp;3. சபரி ரயில் திட்டத்தை விரைவாக முடித்து கொல்லம்-செங்கோட்டை பாதையுடன் இணைக்கவும். பின்னர் அதை விழிஞ்ஞம் துறைமுகத்துடன் இணைப்பது. (திட்டத்தின் செலவில் 50 சதவிகிதத்தை அரசு ஏற்கும் என்று உறுதியளித்துள்ளது) &nbsp;4. முந்திரி, தென்னை நார், கைத்தறி போன்ற பாரம்பரிய தொழில்களுக் கான சிறப்பு மீட்புத் திட்டம். 5. அங்கன்வாடி மற்றும் ஆஷா &nbsp;போன்ற திட்டங்களின் தொழிலாளர் கள் மற்றும் ஊழியர்களுக்கான கௌ ரவ ஊதியம், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம், மதிய உணவுத் திட்டம் மற்றும் சமையல் செலவுகளுக்கான நிதியை அதிகரிப்பது. &nbsp;6. மனித-வன விலங்கு மோதலைத் தடுப்பதற்கான கொள்கைகளுக்கு ரூ.1000 கோடி &nbsp;7. கேரள புலம்பெயர்ந்தோர் நல நிதி வாரியத்திற்கு பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து திரும்பும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான சிறப்பு தொகுப்பு. &nbsp;8. மத்திய, மாநில மற்றும் நுகர் வோர் சமமாக முதலீடு செய்ய ரூ.1000 கோடி ரப்பர் விலை நிலைப் படுத்தல் நிதி. ரப்பருக்கு ரூ.250 ஆத ரவு விலையை அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வலியுறுத்தி யுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.